News December 25, 2025
9 பேர் பலி: CM ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

கடலூரில் நிகழ்ந்த கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு CM ஸ்டாலின் இரங்கலும் ஆறுதலும் தெரிவித்துள்ளார். அத்துடன், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ₹3 லட்சம், படுகாயமடைந்து சிகிச்சையில் உள்ளவர்களுக்கு தலா ₹1 லட்சமும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
Similar News
News January 24, 2026
இரவல் வார்த்தைகளை பேசும் மாணிக்கம் தாகூர்: இன்பதுரை

பண அதிகாரம் கொண்ட NDA கூட்டணியை வீழ்த்த வேண்டும் எனக் கூறிய மாணிக்கம் தாகூருக்கு, அதிமுக எம்பி இன்பதுரை பதிலடி கொடுத்துள்ளார். சுய சிந்தனை கொண்ட மாணிக்கம் தாகூர், கடந்த வாரம் கட்சிக்குள் அடித்த புயலால், யாரோ எழுதி கொடுத்த இரவல் வார்த்தைகளை நிர்பந்தத்தால் பேசியிருக்கிறார்; வெள்ளையர்களிடம் போராடி பெற்று தந்த சுதந்திரம், காங்.,க்கு கிடைக்காமல் போனதுதான் நகை முரண் எனவும் விமர்சித்துள்ளார்.
News January 24, 2026
மெளனம் கலைக்கும் விஜய்

‘ஜன நாயகன்’ பட சென்சார் விவகாரம், கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை குறித்து விஜய் மௌனியாக இருக்கிறார் என பலரும் விமர்சித்திருந்தனர். இந்நிலையில், நாளை நடைபெறும் தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் இவ்விவகாரங்கள் குறித்து விரிவாக விஜய் பேசவுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது. மேலும், 2026 தேர்தல் கூட்டணி தொடர்பான முக்கிய அறிவிப்பையும் விஜய் வெளியிடவுள்ளதாக தவெக வட்டாரங்கள் கூறுகின்றன.
News January 24, 2026
தங்கம், வெள்ளி விலை.. ஒரேநாளில் ₹20,000 மாறியது

<<18944145>>ஆபரணத் தங்கம்<<>> ஒரேநாளில் சவரனுக்கு ₹1,600 அதிகரித்துள்ளது. ஆனால், இதைவிட பேரதிர்ச்சியாக வெள்ளி கிலோவுக்கு இன்று மட்டும் ₹20,000 உயர்ந்திருக்கிறது. சென்னையில் தற்போது, வெள்ளி 1 கிராம் ₹365-க்கும், 1 கிலோ ₹3.65 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 1 வாரத்தில் மட்டும் 1 கிலோ வெள்ளியின் விலை ₹55,000 வரை (கடந்த வாரம் 1 கிலோ ₹3.10 லட்சம்) அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


