News January 15, 2026

9 பாகிஸ்தான் மீனவர்கள் அதிரடி கைது

image

இந்திய கடற்பகுதியில் சட்ட விரோதமாக மீன் பிடித்துக் கொண்டிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 9 மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினர் (ICG) அதிரடியாக கைது செய்துள்ளனர். அத்துடன், அவர்கள் பயன்படுத்திய மீன்பிடிப் படகையும் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் ICG விசாரணை நடத்தி வருகிறது. முன்னதாக, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்தனர்.

Similar News

News January 21, 2026

‘நான் சாகப்போறேன்.. அப்பா என்னை மன்னிச்சிரு’

image

‘என்னை மன்னித்து விடுங்கள்… ஐ லவ் யூ அம்மா, அப்பா’. நாசிக்கில் மாற்றுத் திறனாளி பெண்ணான திக்‌ஷா(21), தற்கொலை செய்து கொள்வதற்கு முன் கையில் எழுதிய வாசகம் இது. தங்களின் எதிர்கால நம்பிக்கையாக இருந்த மகள் இப்படி செய்துவிட்டாளே என பெற்றோர் கண்ணீர் வடிக்கின்றனர். வீட்டில் தூக்கிட்டு கொண்ட திக்‌ஷாவின் சோக முடிவுக்கான காரணம் குறித்து போலீஸ் விசாரித்து வருகிறது. தற்கொலை எதற்கும் தீர்வல்ல என உணருங்கள்.

News January 21, 2026

சற்றுமுன்: விஜய் முக்கிய முடிவு

image

தவெகவின் செயல்வீரர்கள் கூட்டம் விஜய் தலைமையில் ஜன.25-ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கிறிஸ்துமஸ் விழாவிற்கு பின், அரசியல் நிகழ்வில் அவர் பங்கேற்கவில்லை. ‘ஜன நாயகன்’ பட சென்சார் பிரச்னை, சிபிஐ விசாரணை ஆகியவை குறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்த விஜய், இந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றவுள்ளார். இதில், தேர்தல் பணி குறித்து முக்கிய முடிவெடுக்கப்பட வாய்ப்புள்ளது.

News January 21, 2026

இன்று கவனம் பெற்ற இரு இணைப்புகள்.. யாருக்கு பலன்?

image

இன்று நிகழ்ந்துள்ள இரு இணைப்புகள் (திமுகவில் வைத்திலிங்கம், NDA-வில் TTV) அரசியலில் முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளன. வைத்திலிங்கம் இணைந்திருப்பது ஒரத்தநாடு தொகுதியில் மட்டும் திமுகவுக்கு பலன் கொடுக்கும். அதேநேரம் TTV இணைந்திருப்பது தென் மாவட்டங்கள் மட்டுமல்லாமல், டெல்டாவிலும் அதிமுகவுக்கு கூடுதல் பலமாக அமையும். 2021-ல் அமமுக பிரித்த வாக்குகளே, அதிமுகவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

error: Content is protected !!