News September 23, 2024
9 நாட்கள் காலாண்டு தேர்வு விடுமுறையை அளிக்க கோரிக்கை
தி.மலையில் வரும் வெள்ளிக்கிழமை உடன் காலாண்டு தேர்வானது நிறைவடைகிறது.அதனை தொடர்ந்து செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை 5 நாட்கள் காலாண்டு விடுமுறையானது ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சனி, ஞாயிறு, அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி என பார்த்தால் 2 நாட்கள் மட்டும் தான் காலாண்டு விடுமுறை அமைகிறது.எனவே, அக்டோபர் 7ம் தேதி வரை விடுமுறை விடவேண்டும் என ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
Similar News
News November 20, 2024
100 நாள் பணியாளர்களின் வருகை பதிவேடு ஆய்வு
வந்தவாசி பகுதியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வந்தவாசி அருகே உள்ள மும்முனி ஊராட்சியில் நடைபெறும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் செய்யும் பணியையும், அங்கு 100 நாள் பணியாளர்கள் வருகை பதிவேட்டையும் ஆய்வு செய்தார். மேலும் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார்.
News November 20, 2024
இன்று முதல் பழங்குடியினருக்கு சிறப்பு முகாம்
பிர்சா முண்டாவின் 150- வது பிறந்த நாளை முன்னிட்டு தேசிய பழங்குடியினர் தின விழா கொண்டாடும் விதமாகமாவட்டத்தில் கீழ்பென்னாத்தூர்,செங்கம், தண்டராம்பட்டு,கலசப்பாக்கம்,போளூர்,ஆரணி, சேத்துப்பட்டு,செய்யாறு,வெண்பாக்கம்,வந்தவாசி,ஜமுனாமரத்தூர் ஆகிய தாலுகாஅலுவலகங்களில் இன்று 20-ம் தேதி முதல் 25-ம் தேதிவரை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை பழங்குடியினருக்கு சிறப்பு முகாம் நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 20, 2024
பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த தி.மலை எம்பி
தி.மலை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடக்கு ஒன்றியம் ஆராஞ்சி ஊராட்சியில் சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி,சி.என் அண்ணாதுரை எம்பி வாக்களித்த மக்களுக்கு நன்றியினை தெரிவித்தார். உடன் ஒன்றிய செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், கிளை நகர திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.