News April 5, 2025

9 காவல்துறையினருக்கு ஆயுள் தண்டனை – தூத்துக்குடி நீதிமன்றம்

image

தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் கடந்த 1999ஆம் ஆண்டு வின்சென்ட் என்ற விசாரணை கைதி மரணம் அடைந்தார். இது சம்பந்தமான வழக்கு தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் தற்போது டிஎஸ்பியாக இருக்கும் ராமகிருஷ்ணன் உட்பட 9 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.

Similar News

News August 9, 2025

விநாயகர் சிலை கரைக்க வழிமுறைகள்-கலெக்டர்

image

தூத்துக்குடி, கலெக்டர் இளம்பகவத் அறிவிப்பின்படி, விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நீர்நிலைகளில் கரைக்கப்பட வேண்டும். பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ், தெர்மாகோல் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. சிலைகளுக்கு உலர்ந்த மலர், வைக்கோல் ஆகியவற்றால் ஆபரணங்கள் தயாரிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

News August 9, 2025

தூத்துக்குடி: டிகிரி முடித்திருந்தால் ரூ.1,42,400 சம்பளம்….

image

தூத்துக்குடி மக்களே, இந்திய புலனாய்வுத் துறையில் உதவி மத்திய புலனாய்வு (Intelligence Bureau) அதிகாரிக்கு 3,717 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை மாத சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் நாளை ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் இந்த <>லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். மத்திய அரசில் வேலை கிடைக்க அரிய வாய்ப்பு. டிகிரி முடித்தவர்களுக்கு பகிருங்கள்.

News August 9, 2025

தூத்துக்குடி: உதவித் தொகையுடன் தொழிற்பழகுநர் சேர்க்கை

image

தூத்துக்குடி, ஆக.11ல் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது. 8, 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி, ITI, டிகிரி படித்த இளைஞர்கள் அசல் சான்றிதழ்களுடன் பங்கேற்கலாம். 200-க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்பட உள்ளன. மாத உதவித்தொகை ரூ.7,700 முதல் ரூ.10,000 வரை வழங்கப்படும். விவரங்களுக்கு கோரம்பள்ளம் தொழிற்பயிற்சி நிலையத்தில் (0461-2340041) தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் இளம்பகவத் தெரிவித்தார்.

error: Content is protected !!