News April 6, 2025
9 இடங்களில் மாடு விடும் விழா நடத்த அனுமதி

வேலூர் மாவட்டத்தில் வரும் ஏப்ரல் மாதத்தில் 9 இடங்களில் மாடுவிடும் விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 7ஆம் தேதி பள்ளிகொண்டா, 11ஆம் தேதி காட்பாடி, செதுவாலை, 12ஆம் தேதி வடுகன்தாங்கல், 16ஆம் தேதி ராமாபுரம், 17ஆம் தேதி காட்பாடி, 19ஆம் தேதி அக்ராவரம் 19ஆம் தேதி மோட்டூர், மே 2ஆம் தேதி கழிஞ்சூர் ஆகிய இடங்களில் மாடுவிடும் விழாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News August 24, 2025
வேலூரில் இலவச கண் பரிசோதனை முகாம்

வேலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து குடியாத்தம், காட்பாடி ரோடு, இராஜா கோயில் பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள ஆர்.ஜி.டி திருமண மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் 2 மணி வரை இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைவரும் இந்த மருத்துவ முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
News August 24, 2025
வேலூர் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணியில் தீவிரம்

வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் 23.08.2025 இரவு ரோந்து பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட உள்ளன. மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு தலைமையில், வேலூர், காட்பாடி, குடியாத்தம், அணைக்கட்டு பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க இந்த பணி நடக்கிறது.
News August 23, 2025
வேலூர்: இனி வீட்டில் இருந்தே வரி செலுத்தலாம்

வேலூர் மக்களே இனி வீட்டு வரி செலுத்துவது (அ) ரசீது பெறுவது தொடர்பாக அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக தமிழக அரசு புதிய இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த <