News April 3, 2025
9 பதக்கங்களை மதுரை வீரர் வீராங்கனைகள் வென்றனர்

டில்லியில் ‘கேலோ இந்தியா பாரா கேம்ஸ்’ போட்டி நடந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் தமிழகத்தில் இருந்து பாரா வீரர்களுக்கான தடகளம், துாக்குதல், டேபிள் டென்னிஸ், இறகுபந்து, துப்பாக்கி சுடுதல், வில்வித்தை போட்டிகளில் 190 பேர் பங்கேற்றனர்.மதுரை வீரர் வீராங்கனைகள் 9 பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
Similar News
News April 19, 2025
லாரியில் சிக்கி 5 கி.மீ., இழுத்து செல்லப்பட்ட இளைஞரின் உடல்

மதுரை, வாடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சூரியபிரகாஷ் 30. இவருக்கு மனைவி பிரியா 25, 2 மகள்கள் உள்ளனர். நேற்று அதிகாலை வாடிப்பட்டியிலிருந்து டூவீலரில் சென்றபோது ஆண்டிபட்டி பங்களா அருகே மதுரை நோக்கி சென்ற லாரியின் பின் சக்கரத்தில் மோதி டூவீலருடன் சிக்கி உடல் 5 கி.மீ. வரை இழுத்து செல்லப்பட்டது. லாரியில் உடல் சிக்கி இருப்பதை கண்ட சிலர் டூவீலரில் சென்று தகவல் தெரிவித்த பின்பு தான் டிரைவருக்கு தெரியவந்தது.
News April 18, 2025
மதுரை : நியோமேக்ஸின் ரூ.600 கோடி சொத்துக்கள் முடக்கம்

மதுரையை தலைமையிடமாக கொண்ட நியோமேக்ஸ் நிதி நிறுவனம் மீது மோசடி புகார் அளிக்கப்பட்டது. மதுரை பொருளாதார குற்றப்பிரிவு பதிவு செய்த FIR அடிப்படையில் விசாரணையை துவங்கிய அமலாக்கத்துறை இன்று, சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நியோமேக்ஸின் சொத்துக்களை முடக்கியது.சென்னை மண்டல அமலாக்கத்துறை பல்வேறு இடங்களில் உள்ள அசையும்-அசையா சொத்துக்களை தற்காலிகமாக பறிமுதல் செய்துள்ளது.
News April 18, 2025
மதுரையில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று (ஏப்ரல் 18) 21 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு 10 மணி வரை தேனி, மதுரை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்ள உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.