News March 19, 2025
8th Pass செய்திருந்தால் போதும்! ரூ.14,970 சம்பளத்தில் அரசு வேலை…

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பியூன் பணியிடங்களை நிரப்ப தகுதியான பெண் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.18 வயது 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.விண்ணப்ப கட்டணம் கிடையாது.நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இதில் கொடுக்கப்பட்டிருக்கும் முகவரிக்கு மார்ச்.24க்குள் அனுப்ப வேண்டும்.
Similar News
News March 19, 2025
கிராம சபைக் கூட்டம் தேதி மாற்றம்

காஞ்சிபுரத்தில் உள்ள, 274 ஊராட்சிகளில், 23ம் தேதி, காலை 11 மணி அளவில் உலக தண்ணீர் தினத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்துவதற்கு, மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று காலை, அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு, மார்ச் -23ம் தேதி நடக்கவிருந்த சிறப்பு கிராம சபை கூட்டம், மார்ச்- 29ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என, ஊரக வளர்ச்சி துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.
News March 19, 2025
இளைஞர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி

பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ், இளைஞர்களுக்கு திறன் பயிற்சியளித்து, வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் திட்டம், முதன்மை தனியார் நிறுவனங்களுடன் இணைந்து வங்கி, நிதிச் சேவைகள் உள்ளிட்ட துறைகளில் அரசு 12 மாத கட்டணமில்லா பயிற்சி வழங்குகிறது. படித்த 21 – 24 வயது வரை உள்ள மாணவ-மாணவியர் https://pminternship.mca.gov என்ற இணையதள முகவரி வாயிலாக வரும் 31க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.
News March 18, 2025
காஞ்சிபுரத்தில் சிறந்த ஊராட்சிகளுக்கு ரூ.10 லட்சம்

காஞ்சிபுரத்தில் ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று(மார்.17) நடைபெற்றது. அப்போது நல்லிணக்கத்துடன் சாதி வேறுபாடின்றி மயானம் பயன்படுத்தும் சிறந்த ஊராட்சிகளுக்கு தலா ரூ.10 லட்சத்திற்கான காசோலைகளை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.