News April 28, 2025
8வது தேர்ச்சி போதும்.. தமிழக அரசில் 392 வேலைவாய்ப்புகள்!

சென்னை ஹைகோர்ட்டில் அலுவலக உதவியாளர், சுகாதாரப் பணியாளர் உள்பட 392 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளன. குறைந்தபட்சமாக 8 ஆம் தேர்ச்சி பெற்று, 18-47 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு, திறன் சோதனையின் மூலம் தேர்வு நடைபெறும். சம்பளமாக ₹15,700 – ₹58,100 வரை வழங்கப்படும். மே 5-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <
Similar News
News December 6, 2025
ஆண்மை குறைபாட்டை நீக்கும் முருங்கைப்பூ

நாம் முருங்கை காய் மற்றும் கீரைகளை சமைத்து உண்டு ருசித்திருப்போம். ஆனால், முருங்கைப்பூவில் இருக்கும் சத்துகள் மற்றும் ரகசியம் நம்மில் பலரும் தெரியாது. பல்வேறு நன்மைகள் உள்ளன. அவை என்னென்ன நன்மைகள் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோல், உங்களுக்கு தெரிந்த முருங்கைப்பூ நன்மைகளை கமெண்ட்ல சொல்லுங்க.
News December 6, 2025
கூகுள் பட்டியலில் இடம் பிடித்த ஒரே நேரடி தமிழ் படம்!

2025-ல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியிலில், ஒரே நேரடி தமிழ் படமாக ‘கூலி’ 3-ம் இடத்தை பிடித்துள்ளது. அதேபோல், ஷங்கர் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவான ‘கேம்சேஞ்சர்’ 8-ம் இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில், ஹிந்தி படமான ‘சயாரா’ முதலிடத்தையும், கன்னடப் படமான ‘காந்தாரா சாப்டர் 1’ 2-ம் இடத்தையும் பிடித்துள்ளது.
News December 6, 2025
டாஸ்மாக் கடைகள் 8 நாள்கள் விடுமுறை.. அரசு அறிவிப்பு

2026-ம் ஆண்டுக்கான டாஸ்மாக் விடுமுறை நாள்களை TN அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜன.16 (திருவள்ளுவர் தினம்), ஜன.26 (குடியரசு தினம்), பிப்.1 வள்ளலார் நினைவு நாள்), மார்ச் 31 (மஹாவீர் ஜெயந்தி), மே 1 (தொழிலாளர் தினம்), ஆக.15 (சுதந்திர தினம்), செப்.26 (மிலாடி நபி), அக்.2 (காந்தி ஜெயந்தி) நாள்களில் மட்டுமே டாஸ்மாக் கடைகள் இயங்காது. டாஸ்மாக் மூலம் தினமும் ₹100 கோடி அளவிற்கு அரசு வருவாய் ஈட்டி வருகிறது.


