News April 12, 2025

8வது தேர்ச்சி… தமிழக அரசில் 392 வேலைவாய்ப்புகள்!

image

சென்னை ஹைகோர்ட்டில் அலுவலக உதவியாளர், சுகாதாரப் பணியாளர் உள்பட 392 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளிவந்துள்ளது. குறைந்தபட்ச கல்வித்தகுதி 8 ஆம் வகுப்பு. வயது வரம்பு 18-47 வரை பிரிவிற்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு, திறன் சோதனையின் மூலம் தேர்வு நடைபெறும். சம்பளமாக ₹15,700 – ₹58,100 வரை வழங்கப்படும். முழு தகவலுக்கு <>இந்த லிங்கை கிளிக் செய்யலாம்<<>>.

Similar News

News April 19, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: இன்னா செய்யாமை ▶குறள் எண்: 31▶குறள்: சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா செய்யாமை மாசற்றார் கோள். ▶பொருள்: மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப் பிறருக்குப் கேடு செய்யாமலிருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாகும்.

News April 19, 2025

3 அமைச்சர்களை டார்கெட் செய்யும் அதிமுக

image

அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கே.என்.நேரு மற்றும் பொன்முடிக்கு எதிராக சமீபத்தில் அதிமுக சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது. இந்நிலையில், இந்த மூன்று அமைச்சர்கள் விவகாரங்களை கையில் எடுத்து, மக்கள் மத்தியில் அதிமுக தீவிரமாக பரப்புரை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தேர்தல் நேரத்தில் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாக முதல்வருக்கும் உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளதாம்.

News April 19, 2025

இது என்னடா புது கதையா இருக்கு.. அதிர்ச்சியூட்டும் ஆய்வு

image

திருமணம் செய்ய நினைப்பவர்களுக்கு பெரும் அதிர்ச்சி தரும் ஒரு ஆய்வு முடிவு வெளியாகி இருக்கிறது. ஆம்! திருமணம் செய்து கொள்வதால், நினைவாற்றல் பாதிக்கப்பட (Dementia)வாய்ப்புள்ளதாக ஃப்லோரிடாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்ல, திருமணமாகாதவர்கள் , விவாகரத்து ஆனவர்களுக்கு இந்த பாதிப்பு குறைவாக இருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!