News December 20, 2024
சத்துணவு மையங்களில் 8,997 பேருக்கு வேலை

சத்துணவு மையங்களில் காலியாக உள்ள, சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மாதம் ₹3,000 தொகுப்பூதியத்தில் 8,997 சமையல் உதவியாளர்கள் (10ஆம் வகுப்பு தேர்ச்சி / ஃபெயிலானவர்கள்) நியமிக்கப்பட உள்ளனர். 12 மாதங்கள் திருப்திகரமாக பணியை முடிப்போருக்கு, சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும்.
Similar News
News September 17, 2025
தலை முடி உதிர்வை தடுக்கும் உணவுகள்

முடி உதிர்தல் பிரச்சனை அதிகரித்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், முடி உதிர்வதை குறைக்கச் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. அதன்படி, என்ன உணவுகள், முடி உதிர்வை தடுக்கும் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக swipe செய்து பாருங்க. உங்களுக்கு தெரிந்த டிப்ஸ் ஏதேனும் இருந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.
News September 17, 2025
அண்ணாமலை களமிறங்க தயாராகும் தொகுதி!

2026 தேர்தலில் அண்ணாமலை கோவை வடக்கு தொகுதியில் களமிறங்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. தனது மனைவியின் சொந்த ஊர் என்பதால் கோவையில் அவர் போட்டியிட திட்டமிட்டுள்ளாராம். 2024 தேர்தலில் கோவையில் களமிறங்கிய அவர், கோவை வடக்கில் 71,174 வாக்குகளை பெற்றிருந்தார். ADMK 28,998 வாக்குகளும், DMK 80,963 வாக்குகளும் பெற்றிருந்த நிலையில், தற்போது அதிமுகவுடன் கூட்டணியில் இருப்பதால் வெற்றி உறுதி என்கின்றனர் பாஜகவினர்.
News September 17, 2025
ரஜினி- கமல் படத்தை இயக்க யார் கரெக்ட் சாய்ஸ்?

சுமார் 48 ஆண்டுகளுக்கு பிறகு, உச்ச நட்சத்திரங்களான ரஜினியும் கமலும் இணைந்து நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. ஆனால், இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என கூறப்பட்டு வந்த நிலையில், ரஜினி இன்னும் டைரக்டர் முடிவாகவில்லை என கூறிவிட்டார். அப்படியென்றால், இவர்களை இயக்க சரியான டைரக்டர் யார் என நினைக்குறீர்கள்.. ஏன் என்ற காரணத்துடன் கமெண்ட் பண்ணுங்க?