News December 7, 2025
89 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்: ரயில்வே

இண்டிகோ பிரச்னையால், எண்ணற்ற பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் பயணிகள், பொதுமக்களின் நலன்கருதி அடுத்த 3 நாள்களுக்கு 89 சிறப்பு ரயில்களை இயக்கப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது. டெல்லி, மும்பை, பெங்களூரு, பாட்னா, கொல்கத்தா ஆகிய நகரங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. மேலும், நிலைமையை பொறுத்து சிறப்பு ரயில்களை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Similar News
News March 4, 2026
வள்ளலார் பொன்மொழிகள்

*பசிபோக்குவதே ஜீவகாருண்யம் *வாக்கு வேறு, மனம் வேறு, செய்கை வேறு என்ற நிலையில் இறைவனை வழிபடாதீர்கள். மூன்றும் ஒன்றிய நிலையில் வழிபடுங்கள் *பல்லாயிரம் சொற்களை உபசாரமாகப் பேசுவதைவிட, முகமலர்ச்சியுடன் ஒருவரைப் பார்த்தாலே நம்மைச் சந்திப்பவர் மகிழ்வார் *நல்லோர் மனதை நடுங்கச் செய்யக் கூடாது. தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தக் கூடாது. நட்புக்கு வஞ்சகம் செய்யக் கூடாது.
News March 4, 2026
பிறந்த ஊரிலேயே புதைக்கப்படும் கமேனி?

போரில் கொல்லப்பட்ட கமேனியின் இறுதிச்சடங்கு ஈரானில் உள்ள மஷாத் நகரில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. அங்குள்ள இமாம் ரேசா புனித தளத்தில் கமேனியின் உடல் புதைக்கப்படவுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் கூறுகின்றன. அதேஇடத்தில் தான் கமேனியின் தந்தை கல்லறையும் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. கமேனியின் இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகளை ஈரான் அரசு செய்து வருகிறது.
News March 4, 2026
தமிழகத்தில் சாதி வெறியாட்டம் அதிகரிப்பு: ரவிக்குமார் MP

சாதி ரீதியான மோதல்களை தடுப்பதில் காவல்துறை மெத்தனமாக இருக்கக் கூடாது என ரவிக்குமார் MP தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சாதி வெறியாட்டம் அதிகரித்திருப்பதாக குறிப்பிட்ட அவர், இதற்கு பாஜக போன்ற மதவாத சக்திகள் வலுப்பெற்றதே காரணம் என குற்றஞ்சாட்டினார். மேலும், சாதிய வன்கொடுமைகளை தடுக்க நீதிபதி சந்துரு அளித்த பரிந்துரைகளை முழுமையாக தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.


