News August 6, 2024

40 ஆண்டுகளில் 875 மீனவர்கள் கொலை: வைகோ

image

இலங்கைக்கடற்படையால் கடந்த 40 ஆண்டுகளில் 875 இந்திய மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, மாநிலங்களவையில் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார். மீனவர்கள் கொலையை தடுக்க, மத்திய அரசு தவறி விட்டதாக சாடிய அவர், இலங்கைக்கடற்படையால், தமிழக மீனவர்கள் பெரும் துயரங்களுக்கு ஆளாகியிருப்பதாகவும் கூறினார். தமிழக மீனவர்கள் இந்திய குடிமக்களா, இல்லையா? என்பதை அறிய விரும்புவதாகவும், மத்திய அரசை அவர் வினவியுள்ளார்.

Similar News

News January 18, 2026

தமிழகத்தில் தரமான பேராசிரியர்கள் இல்லை: ரவி

image

பள்ளிகல்வி, உயர்கல்வி, பிஎச்டி ஆகிய நிலைகளில் தரமான கல்வியை உறுதிசெய்ய வேண்டும் என கவர்னர் RN ரவி தெரிவித்துள்ளார். மேலும், பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் பல பேராசிரியர்கள் தகுதிவாய்ந்தவர்களாக இல்லை என்றும், அதனால் தரமான பொறியாளர்களை உருவாக்க முடியவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார். அதேநேரத்தில் உயர்கல்வி சேரும் மாணவர்கள் விகிதத்தில் TN தான் முதலிடத்தில் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

News January 18, 2026

BIG NEWS: அதிமுக கூட்டணியில் இணைவதாக அறிவித்தார்

image

தேவேந்திர குல வேளாளர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சந்தன பிரியா பசுபதி பாண்டியன், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார். EPS-ஐ நேரில் சந்தித்து தனது ஆதரவை கூறியுள்ளார். இந்த ஆதரவு, தென் மாவட்டங்களில் இது அதிமுக கூட்டணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

News January 18, 2026

வாக்குகளுக்காக நிலத்தை தாரைவார்த்த காங்கிரஸ்: PM

image

காங்., ஆட்சியில் பல தசாப்தங்களாக ஊடுருவல் அதிகரித்து வந்ததாக PM மோடி விமர்சித்தார். அசாமில் ₹6,957 கோடியிலான காசிரங்கா உயர்மட்ட பாலத்திற்கு அடிக்கல் நாட்டிய பின் பேசிய அவர், காங்., வாக்கு வங்கி அரசியலுக்காக அசாம் மாநிலத்தின் நிலத்தை ஊடுருவல்காரர்களிடம் ஒப்படைத்ததாக குற்றஞ்சாட்டினார். ஊடுருவல்காரர்களை வெளியேற்றி, அசாமின் அடையாளத்தை பாஜக பாதுகாத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

error: Content is protected !!