News March 28, 2024
873 வாக்குச்சாவடி மையங்களில் முதலுதவி மையம்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் 873 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நாளன்று கோடை வெயிலை கருத்தில் கொண்டும், வாக்காளர்களின் நலன் கருதியும் இந்த வாக்குச்சாவடி மையங்கள் அருகே முதலுதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
Similar News
News November 19, 2025
தூத்துக்குடி காவல்துறை முக்கிய அறிவிப்பு

கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து இன்று (நவ. 19) பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் நடைபெற உள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெறும் இந்த குறைதீர் கூட்டத்தில் காவல் நிலையங்களில் நிலுவையில் இருக்கும் மனுக்கள் மற்றும் பிற மனுக்களை பொதுமக்கள் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE
News November 18, 2025
தூத்துக்குடியில் வேலை வாய்ப்பு முகாம்

தூத்துக்குடியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் நவ. 22ம் தேதி நடைபெற உள்ளன. இந்த முகாமில் பல்வேறு கல்வித் தகுதிகள் கொண்ட வேலை தேடுபவர்கள் கலந்து கொள்ளலாம். தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் ஆகியவற்றால் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம்.
News November 18, 2025
தூத்துக்குடி: டிகிரி போதும்.. 2,700 காலியிடங்கள்! APPLY NOW

தூத்துக்குடி மக்களே, பாங்க் ஆஃப் பரோடா (BOB) வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு 2,700 அப்ரண்டீஸ் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 20 வயது நிரம்பியவர்கள் வரும் டிச . 1-க்குள் <


