News February 28, 2026
87 பள்ளி மாணவிகள் மரணம்.. உருக்கமான PHOTOS

இஸ்ரேல் – அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஈரானின் <<19264222>>பெண் குழந்தைகள் தொடக்கப்பள்ளி ஒன்று வெடித்து சிதறியது<<>>. கல் நெஞ்சக்காரர்களையும் கரைய வைக்கும் இச்சம்பவத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 87ஆக உயர்ந்துள்ளது. தற்போது மீட்பு பணிகள் நடந்துவரும் நிலையில், ஏதும் அறியா சின்னஞ் சிறுமிகளின் கிழிந்து தொங்கும் புத்தகப் பைகள், சுக்குநூறான பள்ளிக்கட்ட புகைப்படங்கள் பலரையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளன.
Similar News
News March 5, 2026
நகைக் கடன்.. முக்கிய அப்டேட்

நகைக் கடன் பெற முயற்சிப்பவரா நீங்கள்? உங்களுக்குத்தான் இந்த செய்தி. குறைந்த வட்டியில் கடன் பெறுவது மிகவும் முக்கியம். அந்த வகையில், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா (8.05 – 8.55%), இந்தியன் ஓவர்சீஸ் (8.20%), PNB (8.35 – 9.25%), SBI (8.70 – 9%), கனரா (8.75 – 9.25%) ஆகியவே குறைந்த வட்டி விகிதத்தில் நகைக் கடன் வழங்கி வருகின்றன. இதில், ஏதேனும் ஒன்று தேர்வு செய்து கடன் பெற்றால் வட்டி சுமை குறையும். SHARE
News March 5, 2026
கமேனி கொலை: இந்தியா மௌனம் கலைத்தது

ஈரான் உச்ச தலைவர் கமேனியின் மறைவுக்கு இந்தியா பல நாள்கள் கழித்து இரங்கல் தெரிவித்துள்ளது. முன்னதாக, கமேனி கொல்லப்பட்டதை உலக நாடுகள் வன்மையாக கண்டிக்க வேண்டும் எனவும், ஆக்கிரமிப்புக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்றும் ஈரான் வலியுறுத்தியிருந்தது. இந்நிலையில், மௌனம் கலைத்த இந்தியா, இந்த இக்கட்டான நேரத்தில் ஈரான் மக்களுடன் துணை நிற்பதாக தெரிவித்துள்ளது.
News March 5, 2026
உயிர் வாழ்ந்தால் போதும்.. மனம் திறந்த ராணா

நடிகர் ராணா டகுபதி தனது வாழ்க்கையை புரட்டி போட்ட சிறுநீரக மாற்று சிகிச்சை குறித்து மனம் திறந்துள்ளார். சமீபத்திய பாட்காஸ்டில், பாகுபலி 2-க்கு பிறகு பிரேக் எடுத்து சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றபோது உயிர்வாழ்ந்தால் போதும் என்ற நிலையில் இருந்ததாக கூறினார். கிட்டதட்ட 3 மாதம் பெட் ரெஸ்டில் இருந்த அவர், சிகிச்சைக்கு பின் தனது உடல்நிலையிலும், தோற்றத்திலும் பெரும் மாற்றம் ஏற்பட்டதாக வருந்தியுள்ளார்.


