News April 27, 2024

தேர்தலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 85 பேர் வாக்களிப்பு

image

தேர்தலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 85 பேர் வாக்களித்துள்ளனர். கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் மக்களவைக்கு 2ஆம் கட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் தொகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாத்தா, பாட்டி, மகன்கள், மகள்கள், பேரன், பேத்திகள் என 85 பேர் வாக்களித்துள்ளனர். வேறு வேறு ஊர்களில் வசிக்கும் நிலையிலும், வாக்களிக்க சிக்பள்ளாப்பூர் வந்துள்ளனர்.

Similar News

News March 15, 2026

புதுவை ஜிப்மரில் ரத்தமாற்று குறித்து கல்வி நிகழ்ச்சி

image

புதுவை ஜிப்மர் இரத்த மாற்று நடைமுறைகள் என்ற தலைப்பில் மருத்துவ கல்வி நிகழ்ச்சி நடத்தியது. இதன் ஒரு பகுதியாக நடைமுறை பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. காய சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை துறைகளில் இரத்த
மாற்று முறைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. இதில் இரத்த மாற்று, அவசர சிகிச்சை, மயக்க மருத்துவம் ஆகிய நிபுணர்கள், உட்பட 150 பேர் நேரடியாகவும், ஆன்லைன் மூலமும் 2000 பேர் கலந்து கொண்டனர்.

News March 15, 2026

ஒரு மாவட்டமே திமுகவுக்கு கிடையாதா?

image

தொகுதிப் பங்கீட்டில் திமுக கூட்டணியில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் புகைச்சல் உண்டாகியுள்ளது. இந்நிலையில், நாகையில் உள்ள 3 தொகுதிகளும் கூட்டணி கட்சிகளின் வசமே செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால், திமுகவினர் அதிருப்தியில் உள்ளனராம். 2 தொகுதிகளை கம்யூனிஸ்ட் கட்சிகளும், ஒரு தொகுதியை காங்., கட்சியும், மேலும், விசிகவும் ஒரு தொகுதியை கேட்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News March 15, 2026

தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்

image

தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து வைகோ ஆறுதல் தெரிவித்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தபோது, தேர்தலில் போட்டியிடுவீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று வைகோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், புதிதாக உருவான கட்சி (TVK) அதிமுக கூட்டணிக்கு சென்றாலும், திமுக கூட்டணிதான் வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.

error: Content is protected !!