News December 14, 2024
தமிழகத்தில் 84 சதவீத அணைகள் நிரம்பின

நடப்பு ஆண்டில் தமிழகம் அதிக மழையை கண்டதால் 84% அணைகள் நிரம்பியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், மொத்தமுள்ள 14 ஆயிரம் பாசன கண்மாய்களில் 3 ஆயிரக் கண்மாய்கள் நிரம்பிவிட்டன., 2 ஆயிரம் கண்மாய்கள் 75% நிரம்பியிருக்கின்றன. இதனால், அடுத்தாண்டு கோடையில் நீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று தெரிகிறது. இன்னும் வடகிழக்கு பருவமழை ஓயாததால் நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News March 6, 2026
மீண்டும் போடியில் OPS போட்டியா?

தேனி போடிநாயக்கனூரில் OPS போட்டியிட, மகன் ரவீந்திரநாத் விருப்ப மனு பெற்றார். அத்துடன் போடி, கம்பம் (அ) ஆண்டிபட்டியில் தான் போட்டியிடவும் அவர் விருப்பமனு பெற்றுள்ளார். 2021-ல் தேனியில் 3 தொகுதிகளில் திமுக வென்றபோதும், போடியில் OPS வென்றார். தன்னுடைய சமூக மக்கள், உறவினர் அதிகமிருக்கும் பகுதி என்பதால், இம்முறை திமுக சார்பாக போட்டியிட்டாலும் OPS வெற்றிபெற அதிக வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.
News March 6, 2026
42 பற்களை கொண்ட மனிதன்.. கின்னஸ் உலக சாதனை!

32 பற்களை கொண்டவன் மனிதன் என்றால், இவர் ஒரு அசாத்திய மனிதனே. மலேசியாவை சேர்ந்த பிரதாப் முனியாண்டி(33) என்பவருக்கு மொத்தமாக 42 பற்கள் உள்ளதாம். மேல் வரிசையில் 20 பற்களும், கீழ் வரிசையில் 22 பற்களும் உள்ளதாம். இவரின் அதிசயத்தை ‘அதிக பற்களை கொண்ட நபர்’ என கின்னஸும் அங்கீகரித்துள்ளது. அவரின் போட்டோக்களும் வைரலாகி இருக்கும் நிலையில், மக்களும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.
News March 6, 2026
TN-ல் சினிமா ஒரு மதம் போல மாறிவிட்டது: சீமான்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா என கேட்கும் அளவுக்கு சாதாரணமாக யாரையும் கொலை செய்யும் அவல நிலை இருப்பதாக சீமான் விமர்சித்துள்ளார். நல்லாட்சி என்பது சொல்லில்தான் உள்ளது, செயலில் இல்லை என்ற அவர், மாநில உரிமையை பறிகொடுத்தவர்களே, மாநில உரிமை பற்றி பேசுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் சினிமா என்பது மதம் போல ஆகிவிட்டதாகவும் அவர் பேசியுள்ளார்.


