News November 24, 2024
பாகிஸ்தான் கலவரத்தில் 82 பேர் பலி

பாகிஸ்தானில் கடந்த 3 நாள்களாக நடந்து வரும் கலவரத்தில் இதுவரை 82 பேர் பலியாகியுள்ளனர். வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமியர்கள் 2 பிரிவினர் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வதாக தெரிகிறது. இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஷியா பிரிவினரை சன்னி பிரிவினர் தாக்கியதால் கலவரம் வெடித்தது. இதனால் நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு போலீசார் திணறி வருகின்றனர்.
Similar News
News November 19, 2025
டிஜிட்டல் தங்கத்தின் விலை 61% குறைவு

தங்கத்தின் மீதான மக்களின் ஆர்வத்தை பயன்படுத்தி, பல நிறுவனங்கள் குறைந்த விலையில் முதலீடு செய்யலாம் என சொல்லி டிஜிட்டல் தங்க விற்பனையை அதிகரித்தன. இதனால் கடந்த செப்டம்பர் மாதத்தில் அதன் விற்பனை ₹1,410 கோடியாக இருந்தது. ஆனால் இந்த முதலீடு ஆபத்தானது என பொருளாதார நிபுணர்கள் மக்களை எச்சரித்தனர். இதனால் அக்டோபர் மாதத்தில் டிஜிட்டல் தங்க விற்பனை ₹550 கோடியாக சரிந்துள்ளது.
News November 19, 2025
மேகதாது விவகாரத்தில் CM-க்கு கவலையில்லை: RB உதயகுமார்

மேகதாது அணை விவகாரத்தில் CM ஸ்டாலின் மெத்தனமாக செயல்படுவதாக ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மேகதாது விவகாரத்தை பற்றி கவலைப்படாமல், SIR-க்கு போராட்டம் நடத்தி வருவதாகவும் விமர்சித்துள்ளார். தனது சகோதரரான ராகுல்காந்தி மூலம் சித்தராமையாவுக்கு ஸ்டாலின் ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
News November 19, 2025
ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் ஹர்லீன் தியோல்

உலகக்கோப்பை வென்ற மகளிர் அணியில் முக்கிய வீராங்கனையாக திகழ்ந்தவர் ஹர்லீன் தியோல். இவர் மைதானத்தில் மட்டும் அல்ல இன்ஸ்டாகிராமிலும் அசத்தி வருகிறார். நடிகைகளுக்கு சவால் விடும் அளவுக்கு இவர் போடும் போட்டோஸ்களுக்கு லைக்குகள் குவிகின்றன. PM மோடியிடமே உங்கள் பிராகாசத்துக்கு என்ன காரணம் என கேட்டு, வெட்கப்பட வைத்த ஹர்லீனின் அழகின் ரகசியம் என்ன என நெட்டிசன்கள் கேட்கின்றனர்.


