News December 31, 2024

உலக மக்கள் தொகை நாளை 809 கோடியாக உயருகிறது

image

உலக மக்கள் தொகை நாளை 809 கோடியாக அதிகரிக்கும் என அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு மையம் தெரிவித்துள்ளது. அந்த மையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் 2022-2023ம் ஆண்டைக் காட்டிலும் இந்த எண்ணிக்கை 7.1 காேடி அதிகம் எனக் கூறப்பட்டுள்ளது. 2022-23இல் மக்கள் தொகை 7 கோடி அதிகரித்திருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் மக்கள் தொகை அதிகரிப்பு விகிதம் 0.9% குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளது.

Similar News

News September 11, 2025

அரைக்கம்பத்தில் அமெரிக்க கொடி: டிரம்ப் உத்தரவு

image

சார்லி கிர்க் மறைவுக்கு அதிபர் டிரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார். அமெரிக்க இளைஞர்களின் மனதை புரிந்து கொண்டதில் சார்லியை விட சிறப்பானவர் யாருமில்லை என தனது SM-ல் டிரம்ப் பதிவிட்டுள்ளார். சார்லி கிர்க் எல்லோராலும் விரும்பப்பட்டவர் என்று குறிப்பிட்டுள்ள டிரம்ப், அமெரிக்கா முழுவதும் வரும் ஞாயிறு மாலை 6 மணி வரை அமெரிக்க கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

News September 11, 2025

புத்தர் பொன்மொழிகள்

image

*நிம்மதிக்கான இரண்டு வழிகள். விட்டு கொடுங்கள். இல்லை விட்டு விடுங்கள். *உண்மைக்கு மகத்தான சக்தி உண்டு. அதை எவராலும் மாற்றிடவோ மறைத்திடவோ இயலாது. உண்மையை அழிக்கும் சக்தி எவருக்கும் இல்லை. *தீமையை நன்மையால் வெல்லுங்கள். பொய்யினை உண்மையால் வெல்லுங்கள். *உன் வாழ்வில் உண்மையும் அன்பும் நிறைந்திருந்தால், எப்போதும் உன் வாழ்வு மகிழ்ச்சியாகவே இருக்கும்.

News September 11, 2025

சூறாவளி கிளம்பியதே.. WCக்கு குறிவைத்த ரோஹித்

image

இந்திய அணியின் ODI கேப்டன் ரோஹித் சர்மா தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரோஹித் சில மாதங்களாக கிரிக்கெட் களம் காணாமல் இருந்தார். இந்நிலையில் ஆஸி. எதிரான ODI தொடருக்கு தயாராக பயிற்சியை தொடங்கியுள்ளார். ரோஹித் அணியில் இருந்து ஓரங்கட்டப்படுவதாக வதந்திகள் பரவினாலும், 2023ல் தவறவிட்டதை 2027ல் அடையும் எண்ணத்துடன் அவர் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!