News April 17, 2024
தமிழகத்தில் 8,050 பதற்றமான வாக்குச்சாவடிகள்

தமிழகம் முழுவதும் 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மதுரையில் 511, தென்சென்னையில் 456, தேனியில் 381 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச் சாவடிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களுடன் கூடுதலாக போலீஸாரும் பணியமர்த்தப்பட உள்ளனர்.
Similar News
News November 15, 2025
பிஹாரில் CM ஸ்டாலின் பேரணி சென்ற தொகுதியின் ரிசல்ட்

ECI-ன் SIR-ஐ எதிர்த்து பிஹாரின் முசாபர்பூர் தொகுதியில், MGB கூட்டணி கட்சி தலைவர்களுடன் CM ஸ்டாலின் பேரணி சென்றார்.
அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில், அவர் பிரசாரமும் செய்தார். அந்த தொகுதியில் பாஜகவின் ரஞ்சன் குமார் 1,00,477 வாக்குகளையும், காங்கிரஸின் பிஜேந்திரா சௌத்ரி 67,820 வாக்குகளை பெற்றுள்ளனர். இறுதியில் 32,657 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
News November 15, 2025
நவம்பர் 15: வரலாற்றில் இன்று

*1948 – இலங்கையில் மலையகத் தமிழரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. *1949 – மகாத்மா காந்தியைக் கொலை செய்த நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். *2000 – இந்தியாவில் ஜார்க்கண்ட் தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது. *1875 – விடுதலை போராட்ட வீரர் பிர்சா முண்டா பிறந்தநாள். *1982 – காந்தியவாதி வினோபா பாவே உயிரிழந்த நாள். *1986 – டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பிறந்தநாள்.
News November 15, 2025
SA கேப்டனை உருவ கேலி செய்த பும்ரா

IND vs SA மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா கூறிய கருத்து சர்ச்சையாகியுள்ளது. SA கேப்டன் டெம்பா பவுமா பேட்டிங் செய்த போது, அவரது உயரத்தை கேலி செய்யும் வகையில் ‘Bauna’ (குள்ளமானவர்) என பும்ரா கூறியது, ஸ்டம்ப் மைக்கில் கேட்டது. இந்த வீடியோ வைரலான நிலையில், பலரும் பும்ராவை விமர்சித்தனர். ஆனால், SA கோச் ஆஷ்வெல் பிரின்ஸ், இந்த விவகாரத்தை பெரிதாக்க போவதில்லை என தெரிவித்துள்ளார்.


