News October 10, 2024

27 ஆண்டுகளுக்கு பின் டெஸ்டில் 800 ரன்கள்!

image

பாகிஸ்தானுடனான முதலாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில், இங்கிலாந்து 150 ஓவர்கள் பேட்டிங் செய்து, 7 விக்கெட்டுக்கு 823 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. ஹாரி புரூக் 317 ரன்களும், ஜோ ரூட் 262 ரன்களும் குவித்தனர். டெஸ்ட்டில் ஒரு அணி 800 ரன்களுக்கு மேல் குவிப்பது, 27 ஆண்டுகளுக்கு பின் தற்போது நடந்துள்ளது. இதற்கு முன் 1997-ல் கொழும்புவில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் இலங்கை 952 ரன்கள் எடுத்திருந்தது.

Similar News

News August 12, 2025

நெடுஞ்சாலையை தனியாருக்கு விட அன்புமணி எதிர்ப்பு

image

வண்டலூர் – மீஞ்சூர் இடையிலான வெளிவட்டச் சாலையை தனியாருக்கு விற்பனை செய்யும் திட்டத்தை திமுக அரசு கைவிட வேண்டுமென அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவரது அறிக்கையில், 60 KM நீளமுள்ள இச்சாலையை ஏலம் எடுக்கும் நிறுவனம் 25 வருடங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கும் உரிமம் பெறுமென குறிப்பிட்டுள்ளார். மக்களின் வரிப்பணத்தில் கட்டிய சாலையை தனியாரிடம் ஒப்படைப்பது நியாயமற்றது என தெரிவித்துள்ளார்.

News August 12, 2025

துருவ் விக்ரமுடன் மீண்டும் ஜோடி சேரும் அனுபமா

image

துருவ் விக்ரமின் 4-ம் படத்துக்கான பூஜை அண்மையில் நடந்துள்ளது. தெலுங்கு இயக்குநர் ரமேஷ் வர்மா இப்படத்தை இயக்குகிறார். இதில், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர், கேதிகா சர்மா ஆகிய 3 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். AR ரஹ்மான் இசையமைக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துருவ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘பைசன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதிலும் அனுபமா தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது.

News August 12, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஆகஸ்ட் 12 – ஆடி 27 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: சதுர்த்தி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: தேய்பிறை.

error: Content is protected !!