News April 26, 2025

80 வயது மூதாட்டி ரேப், கொலை.. இளைஞர் கைது

image

சென்னையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 80 வயது மூதாட்டி உயிரிழந்தார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி ஹாஸ்பிடலில் அவர் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், அங்கு பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகியிருந்த நாகராஜ் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கழிப்பறையில் தவறி விழுந்த அவருக்கு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.

Similar News

News April 26, 2025

சிந்து நதியில் இந்தியர்களின் ரத்தம் பாயும்: பாக். Ex அமைச்சர்

image

சிந்து நதி குறித்து பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ பேசியது சர்ச்சையாகியுள்ளது. பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக சிந்து நதி ஒப்பந்தத்தை இந்திய அரசு ரத்து செய்தது. இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிலாவல் பூட்டோ, ‘சிந்து நதி நம்முடையது. நமக்கான நீர் இந்த நதியில் பாயும். இல்லையென்றால், அவர்களின் (இந்தியர்கள்) ரத்தம் பாயும்’ எனத் தெரிவித்துள்ளார்.

News April 26, 2025

ஏப்ரல் 26: வரலாற்றில் இன்று

image

▶ 1897 – தமிழ்தாய் வாழ்த்து பாடல் கொடுத்த பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரனார் நினைவு நாள். ▶ 1970 – நடிகை சரண்யா பொன்வண்ணன் பிறந்த நாள். ▶ 1973 – நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி பிறந்த நாள். ▶ 1989 – வங்கதேசத்தில் சூறாவளிக் காற்றால் 1,300-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு. ▶ 1994 – ஜப்பானில் சீன விமானம் விபத்துக்குள்ளானதில் 264 பேர் உயிரிழப்பு.

News April 26, 2025

CSK செய்த மோசமான சாதனை..!

image

ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தும் அணியாக இருந்த CSK-க்கு இந்த ஆண்டு சோதனை காலம்தான். சேப்பாக்கம் மைதானத்திலேயே மோசமான சாதனையை பதிவு செய்திருக்கிறது அந்த அணி. ஐபிஎல் தொடங்கியதில் இருந்தே சேப்பாக்கத்தில் தொடர்ந்து 4 போட்டிகளில் CSK தோற்றதில்லை. ஆனால், இந்த ஆண்டு RCB, DC, KKR, SRH என 4 அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியடைந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்னும் என்னெல்லாம் பார்க்கப் போறோமோ?

error: Content is protected !!