News October 29, 2025
வருமானத்தில் 80% நடிகருக்கு செல்கிறது: செல்வமணி

இன்று பல சூப்பர் ஸ்டார்களை, நடிகர்களை உருவாக்கிய தயாரிப்பாளர்கள் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டதாக இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேதனை தெரிவித்துள்ளார். படத்தின் மொத்த வருமானத்தில் 80% நடிகர்கள் எடுத்து செல்வதால், தயாரிப்பாளர்களால் அடுத்தடுத்து படம் எடுக்க முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஒரு படம் யாரால் வெற்றியடைகிறது என நடிகர்களுக்கு தெரியவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.
Similar News
News October 29, 2025
போதைப்பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணா ஆஜர்

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் படி நிபந்தனை ஜாமினில் வெளிவந்தனர். இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றிருப்பதாக ED-யும் விசாரணையை தொடங்கியது. இதில், இருவரும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து, கிருஷ்ணா இன்று ஆஜரான நிலையில், அவரிடம் ED விசாரணை நடத்தி வருகிறது.
News October 29, 2025
₹29,000 சம்பளம், 600 பணியிடங்கள்: APPLY NOW!

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் RITES நிறுவனத்தில் காலியாகவுள்ள 600 சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டண்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: பொறியியல் டிப்ளமோ. வயது உச்ச வரம்பு: 40. தேர்வு முறை: எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு. சம்பளம்: ₹29,735. விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.12. விண்ணப்பிக்க இங்கே <
News October 29, 2025
2026 தேர்தலுக்கு பின் பாஜக காணாமல் போகும்: ரகுபதி

2026 தேர்தலில் DMK தோல்வியடையும் என BJP தலைவர்கள் கூறி வருகின்றனர். இதற்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி, 2026-ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் இருந்து பாஜக காணாமல் போகும் என்று தெரிவித்துள்ளார். நெல் கொள்முதல் தொடர்பான EPS விமர்சனங்களுக்கு பதிலளித்த அவர், தனக்கு உள்ளே இருக்கும் வெறுப்பை தான் EPS வெளிப்படுத்தி வருகிறாரே தவிர, மக்கள் மத்தியில் எந்த வெறுப்பும் இல்லை என்று குறிப்பிட்டார்.


