News May 19, 2024

80 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் திருட்டு

image

பெரம்பலூர், ஆலத்தூர், பாடாலூர் பேருந்து நிலையம் அருகில் கூத்தனூரைச் சேர்ந்த நல்லேந்திரன் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு சென்ற நிலையில் காலையில் வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு சுமார் 80 லட்சம் மதிப்புள்ள 25 கீ போர்டு, 10 ஆண்ட்ராய்ட் போன்கள் திருடு போனது தெரிந்தது. இதுகுறித்த புகாரில் பாடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Similar News

News August 28, 2025

பெரம்பலூர்: இலவச சட்ட உதவி வேண்டுமா?

image

பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவலுக்கு பெரம்பலூர் மாவட்ட சட்ட ஆலோசனை மையத்தை (04328-296206) தொடர்பு கொள்ளலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!

News August 28, 2025

பெரம்பலூர்: இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் வீடு மற்றும் நிலம் இல்லாதவர்களுக்கு கான்கிரீட் வீடு கட்ட இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகம் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை (4328-225700) அழைக்கவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணவும்!

News August 28, 2025

‎பெரம்பலூர்: உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

image

‎பெரம்பலூர் மாவட்டத்தில் (28-09-2025) இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எளம்பலூர் தந்தை ரோவர் உயர்நிலைப் பள்ளி, ஆதனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் 15 துறைகள், 46க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்படுகிறது. இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!