News March 16, 2025
80 புதிய வழித்தடங்களில் மினிபஸ்கள் இயக்க முடிவு

சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே குறைவான சேவை உள்ள வழித்தடங்களில் கூடுதலாகவும், போக்குவரத்து சேவை இல்லாத வழித்தடங்களில் புதிதாகவும், மினிபஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சேலம், தர்மபுரி மாவட்டங்களில் 80 புதிய வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்கமுடிவு செய்யப்பட்டுள்ளது என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News March 16, 2025
சேலம்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்கவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று மார்ச்.16 இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரங்கள்.
News March 16, 2025
சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகர பகுதிகளில் இரவு நேரங்களில் குற்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், பொதுமக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மாநகர காவல் துறை தொடர்ந்து பணியில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் இன்று (மார்ச் 16) மாநகரப் பகுதி முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
News March 16, 2025
கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தில் 3,500 வீடுகள்

கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் 580 வீடுகளும், வாழப்பாடி ஒன்றியத்தில் 429 வீடுகளும், கொளத்தூர் ஒன்றியத்தில் 379 வீடுகளும், எடப்பாடி ஒன்றியத்தில் 335 வீடுகளும், தலைவாசல் ஒன்றியத்தில் 279 வீடுகளும், ஆத்தூர் ஒன்றியத்தில் 190 வீடுகளும் என மொத்தம் 20 ஊராட்சி ஒன்றியங்களில் 3,500 வீடுகள் கட்டுவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆட்சியர் தகவல்.