News April 13, 2025
8 பேர் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்

ஆந்திராவின் கைலாசப்பட்டினத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹2 லட்சம், காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹50,000 நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 7 பேர் படுகாயமடைந்து ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News November 25, 2025
அதிக ஜனத்தொகை கொண்ட நகரம் எது?

உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாக இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தா உருவெடுத்துள்ளது. சுமார் 4.2 கோடி பேர் அந்நகரத்தில் வசிப்பதாக UN அறிக்கை கூறுகிறது. 3.7 கோடி மக்கள்தொகையுடன் இரண்டாம் இடத்தில் வங்கதேச தலைநகர் டாக்காவும், 3.34 கோடி மக்கள்தொகையுடன் ஜப்பான் தலைநகர் டோக்கியோ மூன்றாம் இடத்திலும் உள்ளன. எனினும், ஜகார்த்தாவில் லட்சக்கணக்கான மக்கள் வீடின்றி வாழ்வதாக கூறப்படுகிறது.
News November 25, 2025
கள்ள ஓட்டுகளை நம்பியுள்ள கட்சி திமுக: ஜெயக்குமார்

கல்வித்தகுதியே இல்லாத சிலர் BLO-க்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக அதிமுகவின் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். SIR பணிகளில் இதுபோன்றோர் எப்படி பணிபுரிவர் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். எனவே, அனைத்து BLO-க்களின் தகுதிகளை உள்ளடக்கிய பட்டியலையும் ECI-யிடம் அவர் கேட்டுள்ளார். மேலும், கள்ள ஓட்டுகள், இறந்தவர்களின் வாக்குகளை மட்டுமே திமுக நம்பி இருப்பதால், SIR-ஐ அக்கட்சி எதிர்ப்பதாகவும் விமர்சித்தார்.
News November 25, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 25, கார்த்திகை 9 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:31 AM – 9:00 AM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: பஞ்சமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶சந்திராஷ்டமம்: மிருகசீரிடம் ▶சிறப்பு: செவ்வாய் வழிபாட்டு நாள். ▶வழிபாடு: கந்தகுரு கவசம் பாடி முருகனை வழிபடுதல்..


