News March 13, 2025
மொரிஷியஸூடன் 8 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து (2/2)

இந்தியா – மொரிஷியஸ் இடையே பரஸ்பரம் உள்ளூர் கரன்சியில் வர்த்தகம், கடல்சார் தகவல் பரிமாற்றம், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு, குறு, சிறு, நடுத்தர தொழில் துறையை விரிவாக்குவது உள்ளிட்ட 8 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. மேலும், மொரிஷியஸில், இந்திய நிதி உதவியுடன் கடலுக்கு அடியில் பைப் லைன் அமைப்பது, ENT மருத்துவமனை கட்டுவது உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களும் நிறைவேற்றப்படவுள்ளன.
Similar News
News March 14, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
News March 14, 2025
பூஜ்ஜியம் என்ற இலக்கை நோக்கி தமிழகம்: மா.சு

TNல் மகப்பேறு இறப்பு, சிசு இறப்பு விகிதம் பூஜ்ஜியம் என்ற இலக்கை நோக்கி அரசு செயல்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 2020-21ம் ஆண்டில் 1 லட்சம் மகப்பேறுகள் நடந்தால், அதில் 73% என்ற அளவிலிருந்த இறப்பு விகிதம், 2024-25ல் 39% ஆக குறைந்துள்ளது. 2020-21ல் 1,000 குழந்தைகள் பிறந்தால் 9.7% என்ற நிலையிலிருந்த சிசு இறப்பு விகிதம், தற்போது 7.7% ஆகக் குறைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
News March 14, 2025
இன்றைய (மார்ச் 14) நல்ல நேரம்

▶மார்ச்- 14 ▶மாசி – 30 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 09:30 AM – 10:30 AM & 05:00 PM – 06:00 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 01:30 AM & 06:30 PM – 07:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 AM ▶எமகண்டம்: 03:00 AM – 04:30 AM ▶குளிகை: 07:30 AM- 09:00 AM ▶திதி: பிரதமை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶சந்திராஷ்டமம்: அவிட்டம் ▶நட்சத்திரம் : பூரம்.