News October 27, 2025

கொடிய விஷமுள்ள 8 பாம்புகள் இவைதான்!

image

மழைப்பொழிவைப் பெறும் அடர்ந்த காடுகளான அமேசான் காடுகளில் ஏராளமான உயிரினங்கள் வாழ்கின்றன. அதில், குறிப்பாக ஆபத்தான மற்றும் கொடிய விஷமுள்ள பாம்புகள் சில உள்ளன. இந்த பாம்புகள், காடுகளின் சுற்றுச்சூழல் அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை என்னென்ன பாம்புகள் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. share பண்ணுங்க

Similar News

News October 28, 2025

நெல் மூட்டைகளை திமுக அரசு பாதுகாக்கவில்லை: அன்புமணி

image

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பதில் திமுக அரசு அலட்சியம் காட்டுவதாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். அரிசி அரவை ஆலைகளுக்கு அனுப்புவதற்காக, கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட 36,000 நெல் மூட்டைகள் இன்னும் அனுப்பி வைக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, கடந்த 10 நாள்களாக பெய்த மழையில் நனைந்த நெல் மூட்டைகள் முளைக்க தொடங்கிவிட்டதாகவும் அன்புமணி பேசியுள்ளார்.

News October 28, 2025

நாட்டில் 22 போலி பல்கலைக்கழகங்கள்

image

நாடு முழுவதும் 22 போலி பல்கலைக்கழகங்கள் செயல்படுவதாக UGC அறிவித்துள்ளது. இந்த பட்டியலில், 10 பல்கலை.,களுடன் டெல்லி முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக உ.பி.யில் 4, ஆந்திராவில் 2, மேற்கு வங்கத்தில் 2, கேரளாவில் 2, மகாராஷ்டிரா, புதுச்சேரியில் தலா ஒரு பல்கலைக்கழகங்கள் செயல்படுவதாக தெரிவித்துள்ளது. மேற்கூறிய கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் பட்டங்கள் அங்கீகரிக்கப்படாது என்றும் அறிவித்துள்ளது.

News October 28, 2025

Sports Roundup: ரஞ்சியில் களமிறங்கும் ஜெய்ஸ்வால்

image

*புரோ கபடியில் பாட்னா பைரேட்ஸ் 46-37 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸை வீழ்த்தி எலிமினேட்டர் சுற்றுக்கு முன்னேற்றம். *வங்கதேசத்திற்கு எதிரான முதல் டி20-ல் வெஸ்ட் இண்டீஸ் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி. *ஆசிய யூத் கேம்ஸ் மகளிர் ஹேண்ட்பாலில், இந்தியா 33-17 என்ற புள்ளிகள் கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தியது. *ராஜஸ்தானுக்கு எதிரான ரஞ்சி போட்டியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாடுவார் என தகவல்.

error: Content is protected !!