News April 27, 2025
நுரையீரலில் 8 cm கத்தி : ஷாக்கிங் ஆப்ரேஷன்

சந்தோஷ் தாஸ் என்பவரின் நுரையீரலில் இருந்து 8 cm நீளமுள்ள கத்தியை ஒடிசா அரசு மருத்துவமனை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர். 3 வருடங்களுக்கு முன்பு பெங்களுருவில் கத்தியால் குத்தப்பட்ட தாஸுக்கு சிகிச்சை முடிந்தபின்பும் வறட்டு இருமல் இருந்துள்ளது. இதற்காக 8 மாதங்களாக சிகிச்சை பெற்ற நிலையிலும் குணமாகவில்லை. இந்நிலையில், சிடி ஸ்கேனில் கத்தி இருந்தது கண்டறியப்பட்டு தற்போது நீக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 30, 2025
புள்ளிங்கோ அச்சுறுத்தலை நசுக்குக: கார்த்தி சிதம்பரம்

<<18693605>>திருத்தணி சம்பவத்தின்<<>> எதிரொலியாக மாநிலம் முழுவதும் தங்களது சக்தியை போலீஸ் காட்ட வேண்டும் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். தனது X பதிவில், TN-ல் புள்ளிங்கோ அச்சுறுத்தலை இரும்புக்கரம் கொண்டு நசுக்க வேண்டும் என கூறியுள்ளார். வாகன சோதனையை தீவிரப்படுத்துவதுடன், குற்றப்பின்னணி உடையவர்கள் வாரத்திற்கு 3 முறை காவல் நிலையத்தில் ரிப்போர்ட் செய்ய வைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
News December 30, 2025
TN-ல் போதைப் பொருள்.. BJP-ஐ சாடிய வீரபாண்டியன்

TN-ல் நடக்கும் குற்றச் சம்பவங்களுக்கு போதைப் பொருள் புழக்கமே காரணம் என நயினார் சாடியிருந்தார். ஆனால், அதற்கு பாஜக ஆளும் மாநில அரசுகளே காரணம் என CPI மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். அம்மாநிலங்களில் இருந்து TN-ற்கு போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அதற்கு எதிராக நயினார் குரல் கொடுக்காமல், TN அரசை குற்றம் சாட்டுவது வேடிக்கையாக உள்ளது என அவர் கூறியுள்ளார்.
News December 30, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 30, மார்கழி 15 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:00 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: ஏகாதசி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்


