News October 27, 2024
8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே உள்ள நெடுங்காடு பகுதியில் மளிகை கடைநடத்தி வருபவர் அந்தோணி ராஜ் இவர் தனது கடைக்கு வந்த 8 வயது சிறுமியை கடைக்குள் அழைத்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியதை அடுத்து நெடுங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடிவந்தனர் இதனிடையே அவர் போலீசில் சரணடைந்தார்.
Similar News
News February 18, 2026
புதுச்சேரியில் தூக்கிட்டு வாலிபர் தற்கொலை

புதுச்சேரி பாகூர் கொம்யூன், பனித்திட்டு சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் மீனவர் தர்மசீலன். இவரது மகன் பிரித்விராஜ் ஐ.டி.ஐ படிப்பை முடித்துவிட்டு கடந்த சில நாட்களாக மன விரக்தியில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், பிரித்விராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என கூறப்படுகிறது. இது குறித்து கிருமாம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 17, 2026
புதுச்சேரி: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

புதுச்சேரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்கு RTO அலுவலகம் செல்லா வேண்டாம். <
News February 17, 2026
புதுவை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


