News January 8, 2026

8 போர்களை நிறுத்தியும் நோபல் பரிசு இல்லை: டிரம்ப்

image

அமைதிக்கான நோபல் பரிசு வழங்காததற்காக நார்வே மீது தனது கோபத்தை டிரம்ப் வெளிப்படுத்தினார். தனியாக 8 போர்களை நிறுத்திய தன்னை, NATO உறுப்பினரான நார்வே நோபல் பரிசுக்கு பரிந்துரைக்காதது முட்டாள்தனமான செயல் என சாடினார். ஆனால், நோபல் தனக்கு ஒரு பொருட்டல்ல என்றும் பல கோடி உயிர்களைக் காப்பாற்றியதே போதும் எனவும் குறிப்பிட்டார். US இல்லை என்றால் NATO மீது சீனா, ரஷ்யாவுக்கு பயம் இருக்காது எனவும் கூறினார்.

Similar News

News February 6, 2026

அதிமுக கூட்டணியில் வேல்முருகன்?

image

திமுக கூட்டணியில் தொடர்வதாக தவாக வேல்முருகன் கூறிவந்தாலும் தனக்கு உரிய மரியாதையும், தொகுதிக்கு போதிய நிதியும் தரவில்லை என்ற வருத்தத்தில் இருக்கிறார். இந்நிலையில் அதிமுக மா.செ.,க்களிடம் வேல்முருகனின் செல்வாக்கு குறித்து EPS கேட்டறிந்தாராம். அதேநேரம் நிர்வாகிகளுடன் வேல்முருகன் நடத்திய ஆலோசனையில் சிலர் அதிமுகவை ஆதரிக்கலாம் என்றுள்ளனர். இதற்கு தேர்தல் நெருங்கட்டும் பார்க்கலாம் என அவர் தெரிவித்தாராம்.

News February 6, 2026

விஜய் விசில் அடிச்சிட்டிருந்தா ஒன்னும் நடக்காது: நயினார்

image

EPS CM-ஆக இருந்தபோது 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்தார் என நயினார் கூறியுள்ளார். ஸ்டாலின் ஒன்றாவது கொண்டு வந்தாரா என கேட்ட அவர், இதைக் கேட்டால் நம்மை டப்பா இன்ஜின் என்பதாகவும், TN-ல் நடப்பது கஞ்சா இன்ஜினா என்றும் சாடியுள்ளார். அத்துடன் அதிமுகவை விமர்சிக்க விஜய்க்கும் தகுதி இல்லை எனவும், கவுன்சிலர் கூட ஆகவில்லை, இன்னும் விசில் அடித்துக்கொண்டிருந்தால் ஒன்றும் நடக்காது என்றும் கூறியுள்ளார்.

News February 6, 2026

காங்கிரஸ் MLA-க்களுக்கு செக் வைத்த திமுக?

image

11 காங்., MLA-க்கள் மீது டெல்லிக்கு ரகசிய ரிப்போர்ட்டை அறிவாலயம் கொடுத்துள்ளதாம். தொகுதியில் அவர்களது செயல்பாடுகள் மோசம் என்றும், அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்டால் வெற்றிக்கு வாய்ப்பில்லை எனவும் கூறியுள்ளதாம். சீட் தந்தால் வேறுதொகுதியில் போட்டியிட அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். திமுகவுடன் கூட்டணியை தொடர விரும்பிய தங்களுக்கே அறிவாலயம் செக் வைத்துவிட்டதாக காங்., MLA-க்கள் புலம்புகின்றனராம்.

error: Content is protected !!