News January 6, 2026

8 குழந்தைகள் பெத்துக்கோங்க… உங்களை யார் தடுத்தது?

image

இந்துக்கள் குறைந்தது 3 முதல் 4 குழந்தைகளை பெற்றெடுக்காவிட்டால் இந்தியா பாகிஸ்தானாக மாறும் என பாஜக நிர்வாகி நவ்னீத் ராணா சமீபத்தில் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த AIMIM கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி, எனக்கு 6 குழந்தைகள் உள்ளனர். அவரோ 4 குழந்தைகள் பெற்றுக்கொள்ள சொல்கிறார். நான்கு ஏன், எட்டு குழந்தைகள் கூட பெற்றுக்கொள்ளுங்கள், உங்களை யார் தடுக்கிறார்கள்? என்றார்.

Similar News

News February 5, 2026

தர்ணாவில் ஈடுபடுவேன்: ராஜமெளலி

image

தான் இயக்கும் ‘வாரணாசி’, 3 மணிநேரம் ஓடக்கூடிய ஒரே பாகமாக மட்டுமே வெளியாகும் என ராஜமெளலி தெரிவித்துள்ளார். படம் வெளியாவதற்குள் இந்தியாவில் போதிய IMAX திரைகள் வந்துவிடுமா என்ற கேள்விக்கு, நமக்கு ஒன்று கிடைக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட இடத்தின் முன்பு தர்ணா செய்வது வழக்கம். அதன்படி இந்தியாவில் நிறைய IMAX திரைகள் உருவாக்க சொல்லி US-ல் உள்ள IMAX அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபடுவேன் என்றார்.

News February 5, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால்
▶இயல்: அரசியல்
▶அதிகாரம்: மடியின்மை
▶குறள் எண்: 602
▶குறள்:
மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.
▶பொருள்: குலம் சிறக்க வேண்டுமானால், சோம்பலை ஒழித்து, ஊக்கத்துடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

News February 5, 2026

ஹிந்தி திணிப்பு கிருமியை கட்டுப்படுத்தணும்: கனிமொழி

image

சிவகாசி ரயில் நிலைய பெயர்ப்பலகையில், தமிழ் எழுத்துக்களை மாற்றி ஹிந்தியை இடம்பெறச் செய்தது சர்ச்சையாகியுள்ளது. தனது X பதிவில் கனிமொழி, சென்னை பூங்கா ரயில் நிலையத்தைத் தொடர்ந்து தற்போது சிவகாசியிலும் ஹிந்தியை முதன்மைப்படுத்தி பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளதாக சாடியுள்ளார். மேலும், நோய்த்தொற்றை போல ஊரெங்கும் பரவிடும் ஹிந்தி திணிப்புக் கிருமியைக் கட்டுப்படுத்தியாக வேண்டும் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!