News February 17, 2025
8-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் பெரிய தெருவை சேர்ந்த டேவிடின் மகள் ஜீவிதா (13), 8-ம் வகுப்பு மாணவி, தாய் வீட்டுக்கு வந்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். விசாரணையில், சிறந்த மாணவியாக இருந்தும் தொடர்ந்து கொரிய வீடியோ கேம்ஸ் விளையாடியதால் மன உளைச்சலில் இருந்து தற்கொலை செய்துகொண்டதாக தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News October 15, 2025
செங்கல்பட்டு சாலையில் போக்குவரத்து மாற்றம்

தீபாவளி பண்டிகை முன்னிட்டு GST சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அக்.17,18 தேதிகளில் ஆவடியில் இருந்து புறப்படும் கனரக வாகனங்கள் பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர் வழியாக தி.மலை போகலாம். மதுரவாயலில் இருந்து சென்னை GST சாலை நோக்கி வரும் வாகனம் ஸ்ரீபெரும்புதூர் காஞ்சிபுரம் வழியாக வரலாம். செங்கல்பட்டு வழியாக வரும் வாகனம் ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் வழியாக சென்னை வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 15, 2025
செங்கல்பட்டு: மூளை சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானம்

மறைமலை நகர் அடுத்த கூடலூர் பகுதியை சேர்ந்தவர் பூபாலன் (36), இவர் கடந்த 12 ந்தேதி தொழிற்சாலை பணியின் போது கூரை மேல் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனடியாக பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2-நாட்களாக சிகிச்சை பெற்று வந்த பூபாலன் நேற்று மூளைச்சாவு அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தார் ஒப்புதலுடன் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
News October 15, 2025
செங்கல்பட்டு: EXAM இல்லை.. POST OFFICE-ல் வேலை ரெடி!

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக். 29க்குள் <