News February 13, 2025
8ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு

செஞ்சியை சேர்ந்த 8ஆம் வகுப்பு மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த தவெக நிர்வாகி சரவணன் காதல் தொல்லை அளித்து வந்துள்ளார். கடந்த பிப்.,11 அன்று மாணவியை வழிமறித்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சரவணன் வற்புறுத்தி உள்ளார். மன உளைச்சலுக்கு ஆளான மாணவி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். செஞ்சி போலீசார் பெண் குழந்தைக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News September 24, 2025
லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் தென்பசியார் கிராம நிர்வாக அலுவலர் பொன்னைவனம் என்பவர் பட்டா மாற்றம் செய்ய ரூ.2500 லஞ்சம் வாங்கியதால் அவரை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து திண்டிவனம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
News September 24, 2025
விழுப்புரத்தில் சொத்து தகராறில் சித்தி கொலை

விழுப்புரம் மாவட்டம், துறிஞ்சிப்பூண்டியில் கிணற்றில், முகம் சிதைந்த நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டது. போலீசார் விசாரணையில், இறந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயக்கொடி என்பது தெரியவந்தது. அவரைக் கொலை செய்தது, ஜெயக்கொடியின் கணவரான பழனிவேலுவின் முதல் மனைவியின் 2வது மகனான பிரகாஷ்ராஜ் என்பதும் தெரியவந்துள்ளது. சொத்துத் தகராறில் தனது சித்தியை அடித்துக் கொலை செய்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
News September 24, 2025
10.5% இட ஒதுக்கீடு: டிசம்பரில் மாநில தழுவிய ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி டிசம்பர் முதல் வாரத்தில் தமிழக முழுவதும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடைபெறும் என விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் இன்று நடைபெற்ற வன்னியர் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.