News April 12, 2025

8ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசுத் துறையில் வேலை

image

நாகை மாவட்டத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மற்றும் மாவட்ட சித்த மருத்துவத் துறையில் இருக்கும் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நல வாழ்வு சங்கம் மூலம் அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. ஆர்வம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 22ஆம் தேதிக்குள் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தை தொடர்பு கொண்டும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 10, 2025

நாகை: பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

image

நாகை, அய்யனார் சன்னதி பகுதியை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ(36).இவர் நேற்று (ஆக.9) தேதி தனது கணவர் அருண்குமார் உடன் பைக்கில் சன்னாநல்லூரில் இருந்து நாகை நோக்கி வந்துள்ளார். அப்போது வவ்வாலடி அரசு பள்ளி அருகில் வேகத்தடையில் ஏறி இறங்கிய போது தவறி விழுந்து ஜெயஸ்ரீக்கு தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இது குறித்து திருக்கண்ணபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News August 10, 2025

நாகை: வங்கியில் பணிபுரிய சூப்பர் வாய்ப்பு!

image

நாகை பட்டதாரி இளைஞர்களே வங்கி வேலைக்கு செல்ல ஒரு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) 750 Apprentices பணியிடங்கள் நிரப்படவுள்ளது. இதற்கு ஏதேனும் பட்டப்படிப்பு முடித்தால் போதும். வயது வரம்பு 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.15,000 முதல் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இத்தகவலை SHARE செய்யுங்க..

News August 10, 2025

லைட்ஹவுஸ் பார்வை நேரம் மாற்றம்!

image

நாகை வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை லைட் ஹவுசில், தினமும் பார்வை பார்வை நேரம் மாலை 3.30 முதல் 5.30 மணி வரையாக இருந்தது. இந்நிலையில், அந்த நேரம் மாற்றப்பட்டு தினமும் காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும், மதியம் 2.30 முதல் மாலை 5.30 மணி வரையிலும் இனி பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திங்கள்கிழமை விடுமுறை என லைட் ஹவுஸ் நிர்வாகி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!