News April 12, 2025
8ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசுத் துறையில் வேலை

நாகை மாவட்டத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மற்றும் மாவட்ட சித்த மருத்துவத் துறையில் இருக்கும் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நல வாழ்வு சங்கம் மூலம் அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. ஆர்வம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 22ஆம் தேதிக்குள் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தை தொடர்பு கொண்டும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 13, 2025
நாகை: ஆதார் அட்டை திருத்தம் இனி ஈஸி!

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.மேலும் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <
News November 13, 2025
நாகை: நடுரோட்டில் மது அருந்திய 2 பேர் கைது

நாகூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நாகூர் நாகை மெயின் ரோட்டில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பால் பண்ணை சேரி மெயின் ரோடு அருகே பொதுமக்களுக்கு இடையூறாக 2 நபர்கள் மது அருந்தி கொண்டிருந்தனர். இதையடுத்து இருவரையும் கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் நம்பியார் நகர் பகுதியை சேர்ந்த விஜய் மற்றும் தமலேஷ் என்பது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்தனர்.
News November 13, 2025
நாகை: அம்மன் கழுத்தில் கிடந்த தாலி திருட்டு

நாகை அருகே வடக்கு பொய்கைநல்–லூரில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் அம்மன் கழுத்தில் கிடந்த ஒரு பவுன் தாலிச்சங்கிலி மாயமாகியுள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் நாகை டவுன் போலீசாருக்கு தகவல் அழைத்தனர். இதையடுத்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, மர்ம நபர் ஒருவர் கருவறைக்குள் சென்று வந்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.


