News March 29, 2024

c-VIGIL செயலியில் குவிந்த 79 ஆயிரம் புகார்கள்!

image

c-VIGIL செயலி மூலம் இதுவரை 79 ஆயிரம் புகார்கள் வந்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததில் இருந்து இதுவரை வந்த புகார்களில் 99% புகார்கள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. இதில் 89% புகார்கள், 100 நிமிடங்களுக்குள் முடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் c-VIGIL செயலி மூலம் வந்த 1,383 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 20, 2026

சனாதனம் பற்றிய உதயநிதி பேச்சு: SC அடுத்த நகர்வு

image

சனாதனம் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக உதயநிதி மீது தொடுக்கப்பட்ட பல்வேறு வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிக்க கோரி உதயநிதி தரப்பில் SC-ல் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் மீது புதிதாக போபாலிலும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதால், மனுவில் சில திருத்தங்கள் செய்ய உதயநிதி தரப்பு அவகாசம் கேட்டது. இதனை ஏற்ற SC, 4 வாரங்களுக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

News March 20, 2026

பெண் டாக்டர் வன்கொடுமை: தேர்தலில் களமிறங்கும் தாய்!

image

கொல்கத்தா ஹாஸ்பிடலில் பயிற்சி டாக்டர் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட டாக்டரின் தாயார் வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். தனது மகள் வழக்கில் இடையூறு செய்த மம்தா ஆட்சியை அகற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதேநேரம், இந்த வழக்கை பாஜக அரசியலாக்குவதாக திரிணாமுல் குற்றம்சாட்டியுள்ளது.

News March 20, 2026

திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி.. பரபரப்பு

image

தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் திமுக – விசிக இடையே இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில், தவெகவுடன் கூட்டணிக்கு வந்தால் துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று திருமாவளவனை விஜய்யே அழைத்ததாக விசிக மாணவரணி துணை செயலாளர் நெப்போலியன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ஏற்கெனவே ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று தவெக வலை விரித்தது விசிகவுக்குத்தான் என அரசியல் நோக்கர்கள் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!