News February 9, 2026

77382 99899 உடனே இந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணுங்க

image

‘77382 99899’ என்ற எண்ணுக்கு மெசேஜ் செய்து, உங்களின் EPFO பேலன்ஸை அறிந்து கொள்ளலாம் தெரியுமா? EPFO-ல் பதிவு செய்யப்பட்ட போன் நம்பரில் இருந்து மேற்குறிப்பிட்ட எண்ணிற்கு, EPFOHO -> உங்களின் UAN நம்பர் -> விருப்பமான மொழி (ENG or TAM) என டைப் செய்து மெசேஜ் செய்தால், உங்களின் பேலன்ஸ் தொகை எவ்வளவு உள்ளது என மெசேஜ் வந்துவிடும். அனைவரும் அறிய வேண்டிய இந்த தகவலை அதிகளவில் SHARE பண்ணுங்க.

Similar News

News February 13, 2026

காதுலயே விசில ஊதி அனுப்புங்க..: விஜய்

image

காசு கொடுத்து வாக்கை வாங்கிவிடலாம் என்ற கணக்கு, தன்னுடைய வருகைக்கு பிறகு வேலைக்கு ஆகாது என விஜய் கூறியுள்ளார். தேர்தலுக்காக கொடுக்கும் பணத்தை சந்தோஷமாக வாங்கிக்கொள்ளுங்கள் அது உங்கள் பணம் தான் என்ற அவர், வாங்கிவிட்டு அவர்களின் காதுகளில் விசிலை ஊதி அனுப்புங்கள் என கிண்டலடித்துள்ளார். மேலும், பணத்தை கொடுத்தால் ஏமாறக்கூடாது எனவும், இதற்கு எதிராக உறுதிமொழி எடுங்கள் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

News February 13, 2026

தங்கம் தென்னரசுவின் மகள் நடிகையானார்

image

அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகள் இமயா ‘ஹார்ட்டின்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். கிஷோர் குமார் இயக்கும் இப்படத்தில் ‘பேட்ட’ படத்தில் நடித்த சனந்த் குமார் நாயகனாக நடிக்கிறார். இப்படத்துக்குள் இமயா வந்தது குறித்து பேசிய இயக்குநர், ஆடிஷனில் தேர்வான பிறகே அவர் அமைச்சரின் மகள் என்பது தெரியும் என தெரிவித்துள்ளார். இமயா, நியூயார்க்கில் திரைக்கதை நுட்பத்தை படித்தவர் என்றும் அவர் கூறியுள்ளார்.

News February 13, 2026

எனக்கு மட்டும் Stalin sir Operating Procedure: விஜய்

image

தமிழகத்தில் அனைத்து தலைவர்களுக்கும் Standard Operating Procedure என்ற SOP வழங்கப்படுகிறது. ஆனால், தனக்கு Stalin sir Operating Procedure ஆக உள்ளது என்று விஜய் தெரிவித்துள்ளார். மக்களைச் சந்திக்கவே அரசு அனுமதி மறுப்பதாக குற்றஞ்சாட்டிய அவர், தன்னை நேசித்த தமிழக மக்களுக்காக நீதி கேட்டே அரசியலுக்கு வந்ததாகவும் கூறியுள்ளார். மக்களிடம் நீதி கேட்காமல் யாரிடம் சென்று நீதி கேட்பது என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!