News July 24, 2024

பாரீஸ் நகருக்கு 77,000 பேர் பாதுகாப்பு

image

ஒலிம்பிக்ஸ் தொடர் நடைபெறவுள்ள பாரீஸ் நகரில் 77,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்நகர மேயர் தெரிவித்துள்ளார். ஜூலை 26ஆம் தேதி தொடங்கவிருக்கும் ஒலிம்பிக் தொடரில் சுமார் 10,500 தடகள வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இத்தொடரை காண்பதற்காக உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 1 கோடி பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 100க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்களும் பாரீஸ் செல்லவுள்ளனர்.

Similar News

News March 10, 2026

NDA தொகுதிப் பங்கீடு.. பாஜகவுக்கு எத்தனை சீட்?

image

NDA கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவுக்கு 29 சீட்களும், பாமகவுக்கு 18 சீட்களும், அமமுகவுக்கு 9 சீட்களும் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 170 சீட்களில் போட்டியிட அதிமுக திட்டமிட்டுள்ள நிலையில், கூட்டணிக்கு விஜய் வந்தால் அனைத்து கட்சிகளும் சில சீட்களை விட்டுக்கொடுக்க ஒப்புக்கொண்டனவாம். இதுபற்றி மார்ச் 14-ல் அறிவிப்பு வரலாம்.

News March 10, 2026

BIG NEWS: விஜய்யிடம் இருந்து விலகி திமுகவுடன் இணைந்தார்

image

தவெக கூட்டணியிலிருந்து விலகுவதாக ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி அறிவித்துள்ளது. 8 மாதங்களாக தவெகவோடு பயணித்த நிலையில், அவர்களது செயல்பாடுகள் சரியில்லாததால் ஆதரவை முழுவதுமாக வாபஸ் பெறுவதாக அக்கட்சியின் தலைவர் MF தமீம் தெரிவித்துள்ளார். அத்துடன், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரிப்பதாகவும், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளதாகவும் தமீம் தெரிவித்துள்ளார்.

News March 10, 2026

3 ஆண்டுகளில் 5 கோப்பைகள் வென்ற இந்திய அணிகள்!

image

2023-ம் ஆண்டு Men’s ODI WC-யை இந்தியா நழுவவிட்டது ரசிகர்களின் இதயங்களை நொறுக்கியது. இதையடுத்து, வீறுகொண்டு எழுந்த இந்தியா 5 ICC கோப்பைகளை வென்றுள்ளது. ODI WC-யை தவறவிட்ட ரோஹித் படை, 2024 T20I WC & 2025 சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. பெண்கள் அணி 2025 ODI WC-யை முதல்முறை முத்தமிட்டது. சில மாதங்களுக்கு முன், U19 இந்திய அணி ODI WC-யை வென்ற நிலையில், தற்போது SKY படை T20I WC-யை தக்கவைத்து கொண்டுள்ளது.

error: Content is protected !!