News April 28, 2025
77 நீதிபதிகள் பணியிட மாற்றம்

மாவட்ட நீதிபதிகள் 77 பேரை பணியிட மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அல்லி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 13-ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி நந்தினி தேவி காலையில் அறிவித்த நிலையில், மாலையில் அவர் மாற்றப்பட்டுள்ளார்.
Similar News
News April 28, 2025
குளு குளு AC-யில் தூக்கமா? அப்போ உஷார்…

கோடை வெயில் பட்டையை கிளப்பும் நேரத்தில் AC இல்லாம தூங்க முடியல என சொல்பவரா நீங்கள். உங்களுக்கு முக்கிய எச்சரிக்கையை மருத்துவர்கள் கொடுத்துள்ளனர். 20°C கீழே AC வைத்து தூங்கினால் உடலில் பல பிரச்னைகள் வர வாய்ப்புள்ளதாம். முக்கியமாக சளி, இருமல், தோல் நோய்கள் உள்ளிட்டவை வருமாம். ஹார்மோன் உற்பத்தி, நீர்சத்து குறைவு உள்ளிட்ட பாதிப்பும் ஏற்படுமாம். AC-ய பாத்து யூஸ் பண்ணுங்க.
News April 28, 2025
IPL: RR அணிக்கு 210 ரன்கள் இலக்கு

இன்றைய ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த GT அணி, RR அணிக்கு 210 ரன்களை இலக்காக நிர்ணயித்திருக்கிறது. தொடக்க வீரர்கள் சாய் சுதர்ஷன் (39) & ஷுப்மன் கில் (84) ஆகியோர் அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்களை குவித்தனர். அதன்பின் களமிறங்கிய ஜோஸ் பட்லரும் (50*) தனது ரன் வேட்டையை தொடர்ந்தார். இதனால், 20 ஓவர்கள் முடிவில், GT அணி 4 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் குவித்திருக்கிறது.
News April 28, 2025
அண்ணாமலை ராஜ்யசபா MP இல்லை

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, ஆந்திராவில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வாவார் என்று செய்திகள் வெளியானது. முன்னதாக, அமித் ஷா – சந்திரபாபு சந்திப்பு நடைபெற்றபோது கூட, இதற்காகத்தான் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர் என்று பேசப்பட்டது. ஆனால், ராஜ்யசபா வேட்பாளராக, ஆந்திராவின் வெங்கட சத்யநாராயணாவை பாஜக அறிவித்துள்ளது. ஆகையால், அண்ணாமலை தற்போதைக்கு MP ஆகப்போவதில்லை.