News February 24, 2025

முதல்வர் மருந்தகத்தில் 762 வகை மருந்துகள் விற்பனை

image

தமிழகத்தில் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க, 1,000 முதல்வர் மருந்தகங்கள் இன்று திறக்கப்பட உள்ளன. இவற்றில், 25 – 50% வரை குறைந்த விலையில் மருந்துகள் விற்கப்படும். அதேநேரத்தில் அரசு மருத்துவமனைகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படும் மருந்துகள் நிறுத்தப்படாது. குறிப்பாக, 762 வகையான மருந்துகள், முதல்வர் மருந்தகங்களில் விற்பனை செய்யப்பட உள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Similar News

News February 24, 2025

யார் கோழை? அமைச்சர் சேகர்பாபு பதிலடி

image

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாதது கோழைத்தனம் என பாமக தலைவர் அன்புமணி பேசியதற்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். வழக்கிற்கு பயந்து மத்திய அரசுக்கு மண்டியிடுவதுதான் கோழைத்தனம். மாநில உரிமைக்காக நெஞ்சை நிமிர்த்தி சவால் விடுபவர் CM ஸ்டாலின் என தெரிவித்துள்ளார். எங்கள் முதல்வர் இரும்பு மனிதர். கோழை என கூறுபவர்கள் அந்த சொல்லுக்கு அர்த்தம் தெரியாதவர்கள் என அவர் அன்புமணியை விமர்சித்துள்ளார்.

News February 24, 2025

தங்கம் விலை சவரனுக்கு ₹80 உயர்வு!

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.24) சவரனுக்கு ₹80 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் கிராம் ₹8,055க்கும், சவரன் ₹64,440க்கும் விற்பனையாகிறது. அதேநேரத்தில் வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி கிராம் ₹108க்கும், கிலோ வெள்ளி கிலோ ₹1,08,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரத்தில் சற்று இறங்கு முகத்தை சந்தித்த தங்கம், தற்போது மீண்டும் ஏறுமுகம் கண்டுள்ளது கவனிக்கத்தக்கது.

News February 24, 2025

திருப்பதி ஏழுமலையான் பக்தர்களின் கவனத்திற்கு..

image

கோடை விடுமுறையில் திருப்பதியில் கூட்டம் அலைமோதும். இதனை முன்னிட்டு, திருப்பதி கோயிலில் மே மாதத்திற்கான தரிசன டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கியுள்ளன. அதன்படி 300 ரூபாய்க்கான முன்பதிவு, இன்று காலை 10 மணிக்கு தொடங்கி இருக்கிறது. அதே நேரத்தில், மதியம் 3 மணிக்கு திருமலையில் தங்கும் அறைகளுக்கான முன்பதிவும் தொடங்க இருக்கிறது. டிக்கெட் பெற <>இந்த லிங்கை கிளிக் செய்யவும்<<>>. SHARE IT.

error: Content is protected !!