News April 2, 2024
இந்தியர்களின் 76 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்

இந்தியாவில் ஒரே மாதத்தில் 76 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் பல கோடி பேர் தங்களது தகவல் தொடர்புக்கு வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். தேவையற்ற, போலிச் செய்திகள், ஆபாச வீடியோக்கள் பகிர்வது தெரிந்தால், அந்த கணக்குகளை வாட்ஸ்அப் நிறுவனம் முடக்கி வருகிறது. அதன்படி, இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் 76.28 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
Similar News
News January 26, 2026
டாய்லெட்டில் 10 நிமிடத்திற்கு மேல் இருக்கீங்களா? உஷார்!

இன்றைய காலத்தில் நம்மில் பலருக்கும், கழிப்பறை என்பது ரீல்ஸ் பார்க்கும் இடமாக மாறிவிட்டது. இப்படி நீண்ட நேரங்கள் கழிப்பறையில் இருப்பதால் மூல நோய், இடுப்பு தசை பலவீனம் உள்ளிட்ட பல உடல் பிரச்னைகள் ஏற்படலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். கழிவறையில் முட்டை வடிவ இருக்கையில் அதிகநேரம் அமரும்போது புவியீர்ப்பு விசையால் இடுப்பின் மீதான அழுத்தம் அதிகரித்து, குடல் சரிவுக்கும் வழிவகுக்கும் என்கின்றனர்.
News January 26, 2026
வைத்திலிங்கத்திற்காக உத்தரவிட்ட கே.என்.நேரு

திமுகவில் இணைந்த கையுடன் வைத்திலிங்கம் செம உற்சாகமாக இயங்கி வருகிறாராம். காரணம், தஞ்சாவூர் செங்கிப்பட்டி அருகே இன்று நடக்கும் விழாவில் CM முன்னிலையில் அவரது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திமுகவில் இணைகின்றனர். அத்துடன் தனது வருகையால் அதிருப்தியில் இருந்த ஒரத்தநாட்டை சேர்ந்த உள்ளூர் திமுகவினரிடம், வைத்திலிங்கத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுங்கள் என அமைச்சர் நேரு கூறியதையும் கேட்டு ஒரே குஷியில் உள்ளார்.
News January 26, 2026
மாதம் ₹10,880 வேண்டுமா? LIC சூப்பர் திட்டம்!

இந்தியாவில் சிறந்த ஓய்வூதிய திட்டங்களில் ஒன்றாக LIC Smart Pension Plan உள்ளது. இதில் குறைந்தபட்ச முதலீட்டு தொகை ₹1 லட்சம் ஆகும். உச்ச வரம்பு இல்லை. இந்த பாலிசியை தனியாகவோ, கூட்டுக் கணக்காகவோ தொடங்க முடியும். தேர்வு செய்யும் பிளானுக்கு ஏற்ப, ஓய்வூதியத்தை 3% அல்லது 6% வரை உயர்த்திக் கொள்ளலாம். இத்திட்டத்தில் மாதந்தோறும் ₹10,880 பெற, ஒரு முதலீட்டாளர் ஒரே முறையாக ₹20 லட்சம் முதலீடு செய்ய வேண்டும்.


