News March 3, 2025
76 லட்சத்து 4,234 ரூபாய் காணிக்கை பெறப்பட்டது

காஞ்சிபுரம் காமாட்சி கோவிலில் உள்ள மூன்று உண்டியல்கள் கோவில் செயல் அலுவலர் ராஜலட்சுமி, ஸ்ரீகார்யம் சுந்தரேச அய்யர், மணியகாரர் சூரியநாராயணன், சரக ஆய்வர் அலமேலு உள்ளிட்டோர் முன்னிலையில், நேற்று, திறக்கப்பட்டு, பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் வாயிலாக எண்ணப்பட்டன. இதில், 76 லட்சத்து 4,234 ரூபாய் ரொக்கமும், 385 கிராம் தங்கமும், 645 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்தது.
Similar News
News September 19, 2025
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன்வெளியிட வாக்காளர் பதிவு அலுவலர் முருகானந்தம் பெற்று கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ உள்ளார்.
News September 18, 2025
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (செப்.18) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 18, 2025
குண்டுப்பெரும்பேடு ஏரியின் கல்வெட்டு திறப்பு

இன்று காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் ஒன்றியம், டைட்டன் நிறுவனம் மற்றும் தேசிய வேளாண் நிறுவனம் இணைந்து புணரமைக்கப்பட்ட குண்டுப்பெரும்பேடு ஏரியின் கல்வெட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் திறந்து வைத்தார். உடன் டைட்டன் நிறுவன துணைத்தலைவர் ரேவதி காந்த், நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருள்மொழி, உதவி செயற்பொறியாளர் மார்கண்டேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.