News August 15, 2024
75,000 பணியிடங்கள் நிரப்பப்படும்: அரசு உறுதி

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 65,483 இளைஞர்களுக்கு அரசு பணி கிடைத்துள்ளதாக CM ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும், 2026 ஜனவரி மாதத்திற்குள் (அடுத்த 16 மாதங்களில்) காலியாக உள்ள 75,000க்கும் மேற்பட்ட அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அவர் உறுதி தெரிவித்துள்ளார். இது, பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும் என நம்பப்படுகிறது
Similar News
News September 18, 2025
GST 2.0: டிவிக்களின் விலை ₹70,000 வரை குறைகிறது

GST 2.0 எதிரொலியாக <<17745738>>கார், பைக் நிறுவனங்கள் <<>>வாகனங்களின் விலையை குறைத்த நிலையில், சோனி நிறுவனமும் பிரீமியம் டிவிக்களின் விலையை குறைத்துள்ளது. அதன்படி, 85 இன்ச் டிவிக்களின் விலை ₹70,000, 75 இன்ச் டிவி – ₹51,000, 65 இன்ச் டிவி 40,000, 55 இன்ச் டிவி – ₹32,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை குறைப்பு வரும் 22-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News September 18, 2025
போலி பாகிஸ்தான் வீரர்களை திருப்பி அனுப்பிய ஜப்பான்

ஃபுட்பால் வீரர்கள் என்ற பெயரில் தங்கள் நாட்டிற்குள் நுழைய முயன்ற, 22 பாகிஸ்தானியர்களை ஜப்பான் திருப்பி அனுப்பியுள்ளது. வகாஸ் அலி என்பவர் போலியான ஃபுட்பால் கிளப் நடத்தி, அதன் மூலம் பலரிடம் பணம் வாங்கிக் கொண்டு, பாகிஸ்தானியர்களை ஜப்பானுக்கு அனுப்புவது தெரியவந்துள்ளது. இதை பாகிஸ்தான் விசாரணை அமைப்பும் உறுதி செய்துள்ளது. கடந்த 2024-லிலும், வாகாஸ் இதேபோல் 17 பேரை ஜப்பானுக்கு அனுப்பியுள்ளாராம்.
News September 18, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: தெரிந்துசெயல்வகை. ▶குறள் எண்: 462 ▶குறள்: தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்றும் இல். ▶பொருள்: தெளிந்து தேர்ந்த நண்பர்களுடன், சேர்ந்து, ஆற்ற வேண்டிய செயலை ஆராய்ந்து, தாமும் நன்கு சிந்தித்துச் செய்தால் ஆகாதது ஒன்றுமில்லை.