News May 29, 2024
75 அதிநவீன குடைகள் வழங்கிய ராம்நாடு எஸ்பி

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் காவலர்கள் வெயில் மற்றும் மழையில் கடுமையாக பணிபுரியும் நிலை உள்ளது. இதனை கருத்தில்கொண்டு காவலர்களுக்கு உதவும்விதமாக 13 நபர்கள் நிற்கக்கூடிய அளவிலான 75 அதிநவீன குடைகளை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ்நேற்று காவலர்களுக்கு வழங்கினார்.
Similar News
News September 12, 2025
பரமக்குடி அருகே அரசு பேருந்துகள் மோதி விபத்து

பரமக்குடி அருகே மதுரை – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் திருவரங்கி அருகே அரசு பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்து, பரமக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News September 12, 2025
ராமநாதபுரத்திற்கு வருகை தரும் செல்வ பெருந்தகை

வாக்கு திருட்டை தடுக்க அகில இந்திய மீனவர் காங். சார்பில் பொதுக்கூட்டம் ராமநாதபுரம் அரண்மனை திடலில் நாளை (13.9.2025) மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் Ex. உள்துறை, நிதி அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வ பெருந்தகை MLA ஆகியோர் சிறப்புரை ஆற்ற உள்ளனர். அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ ஏற்பாடு செய்துள்ளார்.
News September 12, 2025
பரமக்குடியில் நிற்குமா வெளிமாநில ரயில்

பரமக்குடி ரயில் நிலையம் வணிக, கல்வி, சுற்றுலா ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த நிதியாண்டில் ரூ.10 கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டிய நிலையமாக இருந்தும், வெளிமாநில விரைவு ரயில்கள் இங்கு நிற்கவில்லை. ஹூப்ளி, செகந்திராபாத், பெரோஷ்பூர், அயோத்யா, மங்களூர், கன்னியாகுமரி செல்லும் ரயில்கள் பரமக்குடியில் நிறுத்தப்பட வேண்டும் என பயனாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.