News August 17, 2024
75 இடங்களில் மின்சார வாகன ஸ்வாப்பிங் நிலையங்கள்

மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும், அதில் சார்ஜ் செய்யும் நேரத்தை மிச்சப்படுத்தவும், சென்னையில் 75 இடங்களில் அரசுடன் இணைந்து தனியார் நிறுவனம் 75 இடங்களில் ஸ்வாப்பிங் நிலையங்களை அமைக்கிறது. இங்கு சார்ஜ் காலியான பேட்டரியை ஒப்படைத்து விட்டு, 2 முதல் 5 நிமிடங்களில் சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியை பெற முடியும். பேட்டரியின் தன்மைக்கு ஏற்ப கட்டணம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 5, 2026
சென்னையில் நாளை முதல் அமல்!

சென்னையில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, டாஸ்மாக் கடையில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு மது பாட்டிலுடன் ரூ.10 கூடுதலாக வாடிக்கையாளர்களிடம் பெறப்படும். வாடிக்கையாளர்கள் டாஸ்மாக் கடையில் இருந்து வாங்கும் மதுபாட்டில்களை அதே கடையில் திரும்ப ஒப்படைத்தால் ரூ.10 திருப்பி வழங்கப்படும். சுற்றுசூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்த இது செயல்படுத்தப்பட உள்ளது.
News January 5, 2026
சென்னை: அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இதனை ஷேர் பண்ணுங்க மக்களே.
News January 5, 2026
மேற்கு மாம்பலம்: முன்னாள் ராணுவ வீரர் பலி!

சென்னை: மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்(92). முன்னாள் ராணுவ வீரரான இவர், நேற்று(ஜன.4) மாலை நடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த பைக் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த சுப்பிரமணியன், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


