News September 7, 2024
73 ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகளுக்கு ரூ.29 கோடி

செங்கல்பட்டு மாவட்டத்தில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள, நான்காம் கட்டமாக, 73 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில், நீராதாரங்கள் மேம்பாடு, நெற்களம் அமைத்தல் உள்ளிட்ட, 322 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்காக, ரூ.28.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News August 18, 2025
தாம்பரம் மாநகராட்சியில் “சகவாழ்வு திட்டம்”

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை, பொது சுகாதாரத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை இணைந்து செயல்படுத்தும் “சகவாழ்வு திட்டம்” தெருநாய்களுக்கான வெறிநாய் தடுப்பூசி முகாம், தாம்பரம் மாநகராட்சியில் இன்று (ஆக. 18) துவக்கி வைக்கப்பட்டது. இதில் தெருநாய்களை பிடித்து அவற்றிற்கு வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டது. இந்நிகழ்வில் கவுன்சிலர் யாக்கூப் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
News August 18, 2025
செங்கல்பட்டு: கரண்ட் கட்டா? இதை பண்ணுங்க

மழை காலம் தொடங்கி விட்ட நிலையில், கனமழையின் காரணமாக மின்மாற்றி, மின்கம்பம் சேதம் ஏற்பட்டு உங்க ஏரியாவில் மின்தடை ஏற்பட்டால் புகாரளிக்க மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் <
News August 18, 2025
செங்கல்பட்டு: வங்கியில் வேலை, ரூ.93,000 சம்பளம்

மத்திய பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்கில் காலியாக உள்ள 250 மேனேஜர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. இதற்கு MBA முடித்த, 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.93,960 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <