News April 28, 2025

722 சமையல் உதவியாளர்கள் நேரடி நியமனம் – நாளை கடைசி நாள்!!

image

சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 722 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கு 21 வயது முதல் 40 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிடங்கள் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இப்பணிக்கு சம்பளமாக ரூ.9,000 வரை வழங்கப்படும். இப்பணிக்கு நாளை (ஏப்.29) விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.

Similar News

News October 26, 2025

கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் மூன்றாம் ஆண்டு பூஜை!

image

சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று, இரண்டு ஆண்டுகள் முடிவடைந்து, மூன்றாம் ஆண்டு துவக்க விழா நாளை திங்கட்கிழமை 27.10.2025 காலை 9 மணி அளவில் கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. இந்த விழாவில் அம்மனுக்கு 108 சங்காபிஷேக பூஜை நடை பெற்று அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற உள்ளது.

News October 26, 2025

சேலம்: அம்மா உணவகத்தில் கேஸ் கசிவால் பரபரப்பு!

image

சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் இன்று மதியம் உணவு விற்பனை முடிந்த நிலையில் அனைத்து பணியாளர்களும் வீடு திரும்பினர். மாலை திடீரென கேஸ் கசிவு வெளியானது. தொடர்ந்து அங்கிருந்தவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக கசிவை சரி செய்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

News October 26, 2025

சேலம்: அரசு ஐ.டி.ஐ.,யில் சேர ஆட்சியர் அழைப்பு!

image

சேலம் அரசு ஐ.டி.ஐ.,யில் நேரடி சேர்க்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கையில்; சேலம் அரசு ஐ.டி.ஐ.,யில், 2025ம் ஆண்டு நேரடி சேர்க்கை வரும், அக்.31 வரை நடக்க உள்ளது. அதில் கடைசலர், டிஜிட்டல் போட்டோகிராபர், இன்டஸ்ட்ரியல் ரோபோட்டிக்ஸ், டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீஷியன் போன்ற பிரிவுகளில் சேரலாம். இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

error: Content is protected !!