News October 23, 2024
72 வது முறையாக 100 அடியை எட்டிய மேட்டூர் அணை

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் முழு கொள்ளளவு 120 அடி ஆகும். அதைத் தொடர்ந்து கர்நாடகா மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து மேலும் மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 100 அடியை எட்டியுள்ளது. அதைத்தொடர்ந்து இன்று 72-வது முறையாக மேட்டூர் அணை 100 அடியை எட்டி உள்ளது என்று குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 30, 2025
சேலம்: பள்ளி மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை!

சேலம் அரசுப் பள்ளி 9ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த ஊரகத் திறனாய்வுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இந்த தொகை மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது. இதற்கு www.dge.tn.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.
News October 30, 2025
கொளத்தூர் அருகே விபத்து – ஒருவர் பலி

கொளத்தூர் அருகே அய்யம்புதூர் பகுதியை சேர்ந்த கோவில் பூசாரி அய்யந்துரை (65) டிராக்டரில் பயணம் செய்தபோது வால்கிணத்தூர் அருகே சரக்கு வாகனத்துடன் மோதியதில் நேற்று சம்பவ இடத்திலேயே பலியானார். டிராக்டரில் இருந்த சேகர், முனுசாமி ஆகியோர் லேசாக காயமடைந்து மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கொளத்தூர் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News October 30, 2025
சேலம்: நாளை நடைபெறும் முகாம் இடங்கள்!

சேலம் அக்டோபர்-31 வெள்ளிக்கிழமை முகாம் நடைபெறும் இடங்கள்; 1)கொண்டலாம்பட்டி நேரு கலை அரங்கம்.
2) கோல்நாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் கோல்நாயக்கன்பட்டி. 3)இடங்கணசாலை சீனிவாசா திருமண மண்டபம்.
4)வீரகனூர் நாயுடு நல சமுதாயக்கூடம் வீரகனூர்.
5) வாழப்பாடி சமுதாயக்கூடம் புழுதி குட்டை.
6)சங்ககிரி பருவத ராஜ குல திருமண மண்டபம் காவேரிப்பட்டி.


