News August 24, 2024
72 மணி நேரத்தில் காணாமல் போன பள்ளி சிறுமி மீட்பு

பெரம்பலூர் அருகே மலையப்பன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அமிதாபச்சன் சிவரஞ்சனி இவர்கள் மகள் தோமினி பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். 21ஆம் தேதி இவர் காணாமல் போனதாக பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்நிலையில் இன்று புதிய பேருந்து நிலையத்தில் தனியாக இருந்த பள்ளி மாணவியை ஆட்டோ ஓட்டும் நபர் சிறுமியை அழைத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து சிறுமியிடம் விசாரணை நடைபெற்றது.
Similar News
News March 9, 2026
பெரம்பலூர்: எஸ்.பி கேக் வெட்டி கொண்டாட்டம்!

சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு வருடமும் மார்ச் 08-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, 07.03.2026 பெரம்பலூரில் உள்ள தனியார் மஹாலில் மாவட்ட எஸ்.பி அனிதா தலைமையில மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் மகளிர் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் அனைவருக்கும் எஸ்.பி வாழ்த்துகளை தெரிவித்து கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.
News March 8, 2026
பெரம்பலூர்: பெண்கள் மாதம் ரூ.7000 சம்பாதிக்கலாம்- APPLY..!

பெரம்பலூர் மக்களே, மத்திய அரசு எல்.ஐ.சி நிறுவனத்துடன் இணைந்து பீமா சகி திட்டத்தின் கீழ் பெண்கள் மாதந்தோறும் ரூ.7000 வீட்டில் இருந்தே வேலை பார்த்து சம்பாதிக்க வழிவகை செய்துள்ளது. இதற்கு 18 -60 வயதுள்ளவர்கள் மற்றும் கல்வி தகுதி: 10 -12வது வரை இருக்க வேண்டும்.<
News March 8, 2026
பெரம்பலூர்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், பெரம்பலூர் மாவட்ட மக்கள் 04328-296407 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!


