News May 23, 2024
72 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

சிவகாசி சுற்றுவட்டார பகுதியில் உள்ள பட்டாசு, தீப்பெட்டி ஆலைகளில் 2023 ஜனவரி முதல் 2024 ஏப்ரல் வரை 72 குழந்தை, வளரிளம் பருவ தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நீதிமன்றத்தில் இருந்த 18 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.5.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 13, 2025
விருதுநகரில் ஒரு வாரத்தில் அகற்ற கெடு

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மின்கம்பங்கள், மின் வாரியத்திற்கு சொந்தமான உடைமைகள் மீது கட்டப்பட்டுள்ள கேபிள் வயர்கள், விளம்பர தட்டிகளால் ஊழியர்களால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடியவில்லை. மேலும் இதனால் மின்விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் ஒரு வாரத்திற்குள் இவை அனைத்தையும் அகற்ற வேண்டும். தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.
News October 13, 2025
JUST IN விருதுநகருக்கு கனமழை எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று(அக்.13) விருதுநகர், மதுரை,தேனி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த ஒரு வாரம் தமிழ்நாட்டில் கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தீபாவளியன்று கனமழை இருக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. SHARE IT
News October 13, 2025
EXCLUSIVE காரியாபட்டியில் 3145 பேரை கடித்த நாய்கள்

தமிழகத்தில் தெரு நாய்கள், வளர்ப்பு நாய்கள் கடித்து காயமடையும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதில், விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் 01.01.2024 முதல் 31.07.2025 வரை காரியாபட்டி அரசு மருத்துவமனையில் நாய்கடியால் 3145 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.